Sunday, March 7, 2021

Muthum pavizhamum- Prayer to lord Muruga

Muthum pavizhamum-  Prayer to lord Muruga

 

Translated by

P.R.Ramachander

 

https://www.youtube.com/watch?v=WGxBC-7hbH4

 

முத்தும் பவழமும் மரகத பச்சையும்

நீலமும் சிகப்பும்  கோமேதகமும்

மின்னிடும் வைரமும் வைடூரியமும் 

நவரத்தினத்தில் மின்னிடும் ஹாரமும்

பள பள பள வென ஜொலிக்கும் அட்டிகையும்

 கல கல கலவென குலுங்கிடும் வளைகளும்

நவமணி மாலையும் பொன்மணி நகையும்

உன் புன்னகைக்கு ஈடாமோ? முருகா

பரம்குன்றம் திருகுமரா ! 

 

 

Oh Lord  Muruga,Oh  Kumara  of Thirupara  kundram,

Whether  pearls , corals  , the green emeralds

The   shining diamonds   and Vaidooryas

The  garland shining  in Navarathnas(nine gems)

The  necklace   that throws   great luster,

The bangles which produce pleasant sound while shaking

The nine gem chain and  ornaments  of gold and gems

Would  be equal to your soft  smile                                                         1

 

பாலும்  கற்கண்டும் சர்க்கரை பாகும்

கட்டி கரும்பும் கனி ரஸ சாரும்

தேனில் ஊறி தித்திக்கும்   பலாவும்

நாவில் உறும் அறுசுவை உணவும்

கற்பூர வாழையும் அத்தி கனியும்

 கொய்த கனிகளும் கொய்யா கனியும்

 த்ராக்ஷை பேரீச்சை மாதுளம்கனியும்

தேமாங்கனியும் தேவம்ருதமும்

உந்தன் பஞ்சாம்ருதத்திற்கு ஈடாமோ? முருகா ..

பழனி மலை திருக்குமரா......                                                    2

 

Oh Muruga, the divine  lord of Pazhani  mountain,

Whether  , milk, sugar candies. Sugar syrup

The sweet jack fruit which stands  dipped in honey,

The food with  six tastes that is put on the toungue

The  camphor  banana, the fruit of fig,

The  harvested fruits, the guava  fruits

The  fruits of grape , dates and pomegranate

The sweet  mango fruit and nectar of devas

Would be equal  to your panchamrutham?

 

 குழலின் ஓசையும் யாழின்  இசையும்

தும்புரு நாதமும்  மதுர ஸங்கீதமும்

சலங்கை ஒளியும் சங்கின் முழக்கமும் 

தாலாட்டு நயமும் கோலாட்ட நயமும்

பச்சைக் கிளியின் கொச்சை மொழியும்

கூ கூ கூ எனும் குயிலின் கீதமும்

கண கண  கணவெனும் மணியின் நாதமும்

 பால் மனம் கமழும் மழலை மொழியும்

உந்தன் கனிமொழிக்கு ஈடாமோ?  முருகா !

ஸ்வாமிமலை திருக்குமரா!

 

Oh Muruga  , the  divine lad of Swami Malai,

Whether  sound of flute, the  music from yaazh,

The tone of Thumburu, the sweet  music,

The  sound of anklets, the boom of conches.

The diplomacy of lullaby  , the  sweet sound of garbha,

The   lisping toungue  of the   green bbird,

The sound  of sweet   sounding bells,

And the  baby  lingua, smelling  of  milk,

Would be   equal  to your  sweet  talk

                                                            3

அலைகடல் அழகும் பனி மலைத் தொடரும்

 பாயும்  நதியும் வீழும் அருவியும்

கதிரவன் ஒளியும் நீள்மதி நிலவும்

 சிலு சிலு ஊற்றும் சல சல ஓடையும்

பூத்துக் குலுங்கும்  வண்ண மலர்களும்

மழையும் குளிரும் தென்றல் காற்றும்

பனித் துளி படர்ந்த   பசும் பூச்சோலையும்

 நெஞ்சத்தை அள்ளும் வான்முகிலும்

 உந்தன் பேரழகிற்கு ஈடாமோ? முருகா!

திருத்தணிகை திருக்குமரா !

 

Oh Muruga , the divine  lad of Thiruthani,

Would  the beauty  of ocean with waves,and  that of row of snowy  mountains,

The flowing river  ,the falling streams,

The light of Sun,The long light  of moon,

 The cool , cool springs, the streams making  sound,

The  coloured   flowers  , floering in plenty

The rain, the cold , the  southern breeze

The  green garden  covered  with drips of snow,

And the cloud of the sky  that steals our heart

Equal to your   great beauty

 

4

 

 

 

பச்சிலை மூலிகை சித்தர்கள் வைத்தியம்

நாடியில் சொல்லும் சித்தர்கள் வைத்தியம்

தங்க பவழ பஸ்மம்  தின்று

காயகல்பம் உண்பார் சிலரும்

தேடி  அலைந்து திரிவார் பலரும்

சித்தர்கள் வித்தர்கள் அருமருந்தாகிர

 இருந்தும் தீரா  நோய் தீர்க்கும்

உந்தன்  திருநீறுக் கீடாமோ? முருகா !

திருச்செந்தூர் திருக்குமாரா !    

 

Oh Muruga  , Oh divine lad of  THiruchendur,

The sidha treatment  using green leaves,

The sidha treatment as told in the naadi

Some people   eat the ash of gold and coral

To   get   to become   young again,

And to the   rare  medicines of Sidhas

AS well as  experts  , would all these,

Be equal to  your divine ash,

Which cures  incurable   diseases                                              5

 

அரண்மனை வாழ்வும் அரச போகமும்

அறுசுவை உணவும் அரியாசனமும்

ஆயிரம் கோடி காசோடு பணமும்

அயர்ந்துறங்க பஞ்சு மெத்தையும்

மனைவி மக்களும் சுகபோக வாழ்வும்

சொந்தமும் பந்தமும் சொத்தும் சுகமும்

சீரும் சிறப்பும் பெரும் புகழும்

நவநிதி இருந்தும் நிம்மதி தரும்

உந்தன் சந்நிதிக்கு ஈடாமோ? முருகா!

பத்துமலை திருக்குமாரா !            

 

Oh Muruga  , the    divine lad  of pathu malai,

Would life  in palace,, the pleasure of the kings,

Food with   six different tastes, the throne,

Wealth to the tune  of thopusand crores money,

Silk cotton bed   to sleep  deeply

Wife and children , very happy life

Relations and friends, wealth and joy,

Presents and greatness,  the great fame

And  nine type of treasures be equal,

To your  temple   which grants satisfaction                                           6

 

முருகா என்னை காக்கும் கவசம்

சஷ்டி கவசமன்றோ?

வேலா எனக்கு வெற்றி தருவது

உன் கை  வேலன்றோ ?

குமரா எந்தன் குறைகளை கேட்பது

உன் இரு செவியன்றோ?

 சரவணா எனக்கு அருளைத் தருவது

உன் திருக்  கரமன்றோ?

கந்தா என்மேல் கருணைப் பொழிவது

உன் இரு விழியன்றோ?

ஷண்முகா எனக்கு ஆறுதல் தருவது

ஆறு முகமன்றோ?

உனது ஆறு முகமன்றோ?

உனது ஆறு முகமன்றோ?

 

Oh Muruga   is not  the armour  which protects me,

Is the   Skanda  Sashti  Kavacham?

Oh Vels  Is not that  which gives victory to me

Is the vel of your hand?

Oh Lad is not that which hears my problems

Your   r two ears?

Oh Saravana , is not the one  which gives me blessing,

Is your   divine hand

Oh Skanda, is that  that which pours mercy,

On me  is your   two eyes?

Oh Shanmuga , is not that  which consoles me

Your six faces?

Yout   six faces,

Your six faces?

 

2 comments:

muruganandan said...

மிக மிக நன்றி

சௌ. ராசா said...

சூப்பர். மிக நன்று.