Thursday, June 18, 2020

உன் சென்னையில மேவும் கரோண நோயை போக்கிடுவாய்


உன் சென்னையில மேவும் கரோண நோயை போக்கிடுவாய்

Collected and modified  by
P.R.Ramachander

Image may contain: Srinivasa SarmaImage may contain: indoor

(Though I  do not belong to Chennai, I feel greatly disturbed  by the spread  of Carona epidemic there.I decided to pray some goddesses in Chennai for removing the disease.I will take half an hour  to type few lines in Tamil.So I decided to borrow  lines from other famous prayers.I humbly beg those  poets to pardon me. If any of of you dislike it  , I will remove it

1.அகிலாண்ட நாயகியே ஆதிபராசக்தியே
அல்லல்கள் போக்கிடும் அபிராமி அன்னையே
கண்கண்ட தெய்வமே கருணையின் வடிவமே
கலியுகம் காக்கவே காட்சியளிப்பவளே
காளிகாம்பாள் எனும் காமாட்சித்தாயே
கமடேஸ்வரருடன் காட்சி தருபவளே
பாரதிபாடிய பரமகல்யாணியே
வீரமிகு சிவாஜிக்கு வீரத்தைக் கொடுத்தவளே
வெற்றித்திருமகளே வேண்டியவரமருள்பவளே
பெற்ற அன்னையாய்ப் பேணிக்காப்பவளே
பன்னிரு தலங்களில் காமாட்சி எனும் நாமமுடன்
மின்னும் ஒளியாய்க்காட்சி தருபவளே
சென்னைப்பதியில் சீருடன் அமர்ந்து
சென்னியம்மன் எனும் நாமமும் கொண்டவளே
உன் சென்னையில மேவும் கரோண நோயை போக்கிடுவாய்

2.நலமுடன் வாழ அருளல் வேண்டும் !!
ஆனந்த வாழ்வு அளித்திடல் வேண்டும் !!
உனையன்றி வேறே யாரும் இல்லை !!
கருணை தெய்வமே கற்பகமே !!
உன் சென்னையில மேவும் கரோண நோயை போக்கிடுவாய்

3.தாயே கருமாரி எங்கள் தாயே கருமாரி
ஆயிரம் கண்கள் உடையவளே
ஆலயத்தின் தலைமகளே
ஆயிரம் கண்கள் உடையவளே
ஆலயத்தின் தலைமகளே
கடைக்கண்ணாளே பார்த்தருள்வாய்
காலமெல்லாம் காத்தருள்வாய்
கடைக்கண்ணாளே பார்த்தருள்வாய்
உன் சென்னையில மேவும் கரோண நோயை போக்கிடுவாய்

4.ஆதிசங்கரன் பூஜித்த காமாட்சி
ஸ்ரீ சக்கரத்தில் அமர்ந்தவளே காமாட்சி
திருக்காஞ்சி அரசாளும் காமாட்சி
திருமணக்கோலம் கொண்ட காமாட்சி
அர்த்தமேரு அழகூட்டும் காமாட்சி
அண்டினோரின் அடைக்கலமே காமாட்சி
அணைத்தெம்மைக் காக்கின்ற காமாட்சி
கண்ணின் கருமனியே காமாட்சி
கண்கண்ட தெய்வமடி காமாட்சி
ஈசனை அடைந்திடவே காமாட்சி
உன் சென்னையில மேவும் கரோண நோயை போக்கிடுவாய்

No comments: