Thursday, July 30, 2020

Geethopacharam to Goddess Lakshmi



Geethopacharam to Goddess Lakshmi
(Worshipping Lakshmi through song)
P.R.Ramachander
(Since for all of us it is not possible to worship god as per Sastras or Vedas , here is a simple method , to do it by singing . You can sing it in Tamil or English , whichever you prefer. These lines are addressed to Goddess Lakshmi . Just by changing the name to the God whom you want to pray this would become a prayer to any other God .Instead of Lakshmi you can put Shiva, Parvathi, Krishna, Rama , Ayyappa and Hanuman.THis song typed in Malayalam was sent to me by one Usha .May God bless her)
1.worship in Tamil -later it is given in english

ரீ மஹாலக்ஷ்மி கீதோபதேசம்
சாஸ்த்ரோக்த பூஜை செய்வார் சிலர்
வேதோக்த பூஜை செய்வார் சிலர் .... லக்ஷ்மீ
தேன் போல் இந்த கானத்தைப் பாடி நாங்கள்
கீதோபசாரம் செய்வோம். (1)
அழகு சொட்டும் உந்தன் முகத்தை
மனதில் நாங்கள் தியானம் செய்து .... லக்ஷ்மீ
உந்தன் சக்தி வந்திடவே நாங்கள்
ஆவாஹனம் செய்திடுவோம். (2)
த்யாயாமி, ஆவாஹயாமி.
ரத்தினசிம்மாஸனத்திற்கு நாங்கள்
எங்கு செல்வதம்மா .... லக்ஷ்மீ
இந்த சிறு ஆசனத்தை நீயும்
அன்புடனே ஏற்றுக் கொள்வாய். (3)
ரத்ன சிம்மாஸனம் ஸமர்ப்பயாமி.
கால் அலம்ப பாத்யம் நாங்கள் உனக்கு
சுத்தமாகக் கொண்டுவந்து .... லக்ஷ்மீ
பவித்ரமான உந்தன் பாதங்களை
சுத்தம் செய்து அலங்கரிப்போம். (4)
பாதயோஹோ பாத்யம் ஸமர்ப்பயாமி.
மணம் கமழும் சுத்த ஜலத்தினால் நல்ல
சந்தனமும் பூக்களும் சேர்த்து .... லக்ஷ்மீ
அனுக்ரஹிக்கும் உந்தன் கரங்களில் நாங்கள்
அர்க்க்யம் இதைக் கொடுத்திடுவோம். (5)
அர்க்க்யம் ஸமர்ப்பயாமி.
ஆசமனீயம் செய்வதற்கு ஜலம்
மூன்று முறை அளித்திடுவோம் .... லக்ஷ்மீ
மூன்றுவித பாபங்களைப் போக்க ஜலத்தை
மூன்று முறை அருந்திடுவாய். (6)
ஆசமனீயம் ஸமர்ப்பயாமி.
மங்களங்கள் எங்கள் க்ருஹத்தில்
எப்பொழுதும் நடந்துவர .... லக்ஷ்மீ
பசுவின் பாலில் தேனை விட்டு நாங்கள்
மதுபர்க்கம் ஸமர்ப்பிக்கின்றோம். (7)
மதுபர்க்கம் ஸமர்ப்பயாமி.
ஏலக்காயும் குங்கும்ப் பூவும் நல்ல
பச்சைக் கற்பூரமும் மணக்கும் .... லக்ஷ்மீ
தீர்த்தத்துடன் கங்கை கலந்து நாங்கள்
ஸ்நானம் செய்ய ஸமர்ப்பிக்கின்றோம். (8)
ஸ்நானம் சமர்ப்பயாமி, ஸ்நானானந்தரம் ஆசமனீயம் ஸமர்ப்பயாமி.
சின்னஞ்சிறு பட்டு வஸ்திரங்கள் உந்தன்
மேனியிலே சாற்றிடுவோம் .... லக்ஷ்மீ
உந்தன் மேனி ஜ்வலிப்பது போல் எங்கள்
குடும்பமெல்லாம் ஜ்வலித்திடும். (9)
வஸ்த்ரோத்தரீயம் ஸமர்ப்பயாமி.
பூணூலுடன் ஆபரணமும் உந்தன்
சிவந்த மேனி பளபளக்க .... லக்ஷ்மீ
ஐச்வர்யங்கள் நிலைத்திடவே நாங்கள்
உனக்குச் சாற்றி மனம் மகிழ்வோம். (10)
ஆபரணான் ஸமர்ப்பயாமி.
க்ருஹத்திலுள்ள பெண்களுக்கெல்லாம் என்றும்
ஸௌபாக்கியங்கள் நிலைத்திடவே .... லக்ஷ்மீ
சந்தனமும் குங்கும்ப் பொட்டும் நல்ல
அக்ஷதையுடன் அலங்கரிப்போம். (11)
கந்தாக்ஷதான் ஸமர்ப்பயாமி.
கனகாம்பரமும் முல்லை மொட்டும் உனக்கு
கலந்து நல்ல ஹாரம் கட்டி .... லக்ஷ்மீ
கல்யாணங்கள் நடந்து வர உந்தன்
கழுத்தினிலே அணிவிக்கின்றோம். (12)
புஷ்பமாலாம் ஸமர்ப்பயாமி, புஷ்பை: பூஜயாமி.
தசாங்கத்தின் வாசனையுள்ள நல்ல
சந்தனத்தின் மணத்துடனே .... லக்ஷ்மீ
நானாவித புஷ்பமும் மணக்கும்
தூபம் உனக்குக் காட்டுகின்றோம். (13)
தூபம் ஆக்ராபயாமி.
ஸுமங்கலியைக் காக்குமிந்த நல்ல
ஆஜ்யதீபம் காட்டிடுவோம் .... லக்ஷ்மீ
எங்கள் குலதீபத்தைநீயும்
என்றென்றுமே ரக்‌ஷித்திடுவாய். (14)
தீபம் தர்சயாமி, தூபதீபானந்தரம் ஆசமனீயம் ஸமர்ப்பயாமி.
கனிகளுடன் பாயசமும் நல்ல
பக்ஷணங்களும் பஞ்சாம்ருதமும் .... லக்ஷ்மீ
மந்திரம் சொல்லி ஊட்டுவோருக்கு என்றும்
அன்னபூரணி அனுக்ரஹிப்பாள். (15)
நைவேத்யம் நிவேதயாமி, மத்யே மத்யே அம்ருதபானீயம் ஸமர்ப்பயாமி.. ஆசமனீயம் ஸமர்ப்பயாமி.
ஐந்து எண்ணில் குறைவில்லாமல் நல்ல
வெற்றிலையும் பாக்கும் வைத்து .... லக்ஷ்மீ
ரக்தம் போல் உந்தன் திருவாய் சிவக்க இந்த
தாம்பூலத்தை ஸமர்ப்பிக்கின்றோம். (16)
கற்பூர தாம்பூலம் நிவேதயாமி, ஸமஸ்தோபசாரான் ஸமர்ப்பயாமி.
பஞ்ச மஹா பாதகங்களும்
கணப்பொழுதில் தீரும் இந்த .... லக்ஷ்மீ
பஞ்சாலத்தி ஆராதனையை நீயும்
மனம் மகிழ்ந்து ஏற்றுக் கொள்வாய். (17)
பஞ்சமுக தீபம் ஸமர்ப்பயாமி.
ஹாரத்தியில் கற்பூரம் வைத்து இங்கு
வேத வாத்தியம் முழங்கிடவே .... லக்ஷ்மீ
குற்றம் குறை அழிந்திடவே இந்த
ஹாரத்தியை ஏற்றுக் கொள்வாய். (18)
கற்பூர நீராஜனம் தர்சயாமி, ஆசமனீயம் ஸமர்ப்பயாமி, ரக்‌ஷான் தாரயாமி.
ஶ்ரீம் என்னும் மந்திரத்தைச் சொல்லி நாங்கள்
மந்த்ரபுஷ்பம் அளித்திடுவோம் .... லக்ஷ்மீ
ஸுவர்ணபுஷ்ப பாரிஜாதாதி ச்சத்ர-
சாமராதிகளை ஸமர்ப்பிக்கின்றோம். (19)
மந்த்ரபுஷ்பம் ஸமர்ப்பயாமி, ஸுவர்ணபுஷ்பம் ஸமர்ப்பயாமி, பாரிஜாதபுஷ்பம் ஸமர்ப்பயாமி, ச்சத்ர சாமராதௌ ஸமஸ்தோபசாரான் ஸமர்ப்பயாமி.
யானி கானி ச பாபானி ஜன்மாந்தர க்ருதானி ச...லக்ஷ்மீ
தானி தானி விநச்யந்தி ப்ரதக்‌ஷிண பதே பதே. (20)
மந்திரத்தைச் சொல்லி நாங்கள்
ஆத்மாவை ப்ரதக்‌ஷிணம் செய்தோம் .... லக்ஷ்மீ
பூர்வஜன்ம பாபங்களெல்லாம்
நாளடைவில் குறைந்திடுமே. (21)
அஞ்சலி முத்திரை செய்துகொண்டு நாங்கள்
நமஸ்கரித்து வேண்டுகின்றோம் .... லக்ஷ்மீ
இப்பேர்பட்ட சுபதினத்தில் ஆசிகளை நீயும்
பக்தர்களுக்குக் கொடுத்திடுவாய். (22)
ப்ரதக்‌ஷிண நமஸ்காரான் ஸமர்ப்பயாமி.
நோய் நொடிகள் தீரவேண்டும் எங்கள்
உத்தியோகங்களைக் காக்க வேண்டும் .... லக்ஷ்மீ
பக்தர்களாக வாழ வேண்டும் நாங்கள்
நல்ல பெயர் எடுக்க வேண்டும். (23)
ப்ரார்த்தனாம் ஸமர்ப்பயாமி.
உந்தன் வரவைக் காணாமல் மற்ற
தேவரெல்லாம் காத்திருக்கார் .... லக்ஷ்மீ
புனராகமனம் பவது என்று நாங்கள்
மங்களத்தைப் பாடுகின்றோம்.(24)
ஸமஸ்தோபசாரான் ஸமர்ப்பயாமி. க்‌ஷேமார்த்தே புனராகமனாய ச. ஹாரத்தி.
மங்களங்கள் எங்கள் க்ருஹத்தில்
எப்பொழுதும் நடக்க வேண்டும் .... லக்ஷ்மீ
மங்கள வாத்தியம் மங்கள வார்த்தைகள் எங்கள்
காதுகளில் என்றும் ஒலிக்க வேண்டும். (25)
மங்களகரமாய் முடித்து வைத்தாய் நீயும்
மங்களம் பாட வைத்தாய் .... லக்ஷ்மீ
பாடுங்கள் மங்களம் எல்லோரும்
மங்களம் மங்களம் மங்களம். (26)
வேதோக்த பூஜை செய்வார் சிலர்
சாஸ்த்ரோக்த பூஜை செய்வார் சிலர் .... லக்ஷ்மீ
தேன் போலிந்த கானத்தைப் பாடி நாங்கள்
கீதோபசாரம் செய்தோம். (27)
//. சுபம் .//

Sasthroktha poojai seivar silar,
SAtroktha poojai seivar-Lakshmi
Then poal intha Ganathai paadi-naangal
Geethopacharam seivom 1
Azhaguchottum undhan mukhathai,
Manathil naangal dhyanam seithu-Lakshmi,
Unthan sakthi vanthidave –naangal,
Aavahanam cheithiduvom 2
Dhyami-Avahayami
Rathna simhasanathirkku ,
Naangal yengu selvathappa,(Selvathamma- for Goddess dess)
Intha chiru asanathai neeyun,
Anbudane yethu kolvai 3
Rathna simhasanam samarpayami
Kaal alamba paadhyam naangal unakku,
Sudhamaaka kondu vandhu Lakshmi,
Pavithramana undhan paadathai,
Sudham seithu alangarippom 4
Padhayo paadhyam samarpayaami
Manam kamazhum shudha jalatthinaal-nalla,
Chandanamum poovum serthu-Lakshmi,
Anugarahikkum undhan karathil-naangal,
Arghyam ithai koduthiduvom 5
Arghyam samarpayaami
AAchamaneyam seivatharkku-jalam,
Moondru murai alithiduvom –Lakshmi
Moondru vidha paapathai pokka-jalathai ,
Moondru murai arunthiduvai 6
AAchamaneeyam samarpayami
Mangalangal yengal grahathil,
Yeppothum nadanthu vara-Lakshmi,
Pasuvin paalil thenai vittu-nangal,
Madhu parkkam samarppikindrom 7
Madhu parkam samarpayami
Yelakkayum kunkuma ppovum –nalla,
Pachai karpooramum Manakkum –Lakshmi
THeerthathudan gangai kalnthu-naangal,
Snanam seyya samarppikindrom 8
Snanam samarpayaa,i-snana anantharam aachamaneeyam samarpayami
Sinnam chiru pattu vasthrangal unthan.,
Meniyile saathiduvom-Lakshmi,
Unthan meni jwalippathu poal-yengal,
Kudumbam yellam jwalithudume 9
Vasthrothareeyam samarppayami
Poonaludan aabharanamum-unthan,
Sivantha meni pala palakka -Lakshmi
Aiswaryangal nilaithidave-Naangal.,
Unakku saarthi manam magizhvom 10
Aabharanaan samarpayami
Grahathilulla pengalukku yellam -yendrum ,
Saubhagyangal nilaithidave-Lakshmi,
Chandanamum kumkuma pottum –nalla,
Akshathayudan alangarippom 1
Gandhakshathaan samarppyami
Kanakambaramum , mullai mottum –unakku,
Kalanthu nalla haaram ketti-Lakshmi,
Kalyanangal nadanthu vara-unthan,
Kazhuthinile anivikkindrom 12
Pushpa maalaam samarpayami
Pushpai poojayami
Dasangathil vaasanayulla-nalla,
Chandanathin manathudane-Lakshmi,
Naanaa vidha pushpavu
m manakkum,
Dhoopam unakku kaatukindrom 13
Dhoopam agarpayami
Sumangaliyai kaakum intha –nalla,
AAjya dheepam kaattiduvom-Lakshmi,
Yengal kula dheepathai neeyum,
Yendrendrume rakshithiduvai 14
Dheepam agarapayaami
Dhoopam –dheepanantharam aachamaneeyam samarppayami
Kanikaludan payasavum -nalla,
Bakshanamum pancha amruthamum –Lakshmi,
Manthram cholli oottu vorukku -yendrum ,
Anna poorni anugrahippal 15
Naivedhyam nivedhayaami , Madhya madhye
Amrutha paaneeyam samappayami, Amruthapi dhanamasi
AAchamaneeyam samarppayami
Iynthu yennil kuraivillamal nalla ,
Vethilayum paakuuum vaithu –Lakshmi,
Raktham poal un thiru vai sivakka- intha,
THamboolathia samarppikindrom 16
Karpoora thamboolam nivedhayaami
SAmasthopachaaraan samarppayami
Pancha maha pathakangalum ,
Kana pozhuthil theerum indha –Lakshmi,
Panchalathi aaradhanayai neeyum ,
Manam magizhndhu yeththu kolvai 1
Pancha mukha dheepam samarpayami
Harathiyil karpooram vaithu –ingu,
Vedha vaadhyam muzhangidave-Lakshmi,
Kutham kurai azhinthidave-intha,
Haarathiyai yethu kolvai 18
Karpoora neerajaamm darsyami , Aachamaneeyam samarppayami,
Rakshaam dhaarayami
Sreem yennum manthrathai cholli-naangal,
Manthra pushpam alithiduvom-Lakshmi,
Suvarna pushpa parijaathaadhi Chatra,
Chamaraadhikalai samarppikindrom 19
Manthra pushpam samarpayami-Suvarna pushpam samarpayami ,
Parijaatha pushpam samarpayami -Chathra chaamarathao samastha upachaaraan samarpayami
Yaani Kaani cha Paapaani ,
Janmanthara kruthaani cha -Lakshmi,
THaani thaani vinasyanthi ,
Pradakshina poadhe padhe 20
Manthirathai cholli naangal,
AAthmaavai pradakshinam seithiom –Lakshmi,
Poorva jahma paapangal yellam ,
Naaladaivil kurainthidume 21
Anjali mudhrai seithu kondu-Naangal,
Namaskarithu vendukindrom-Lakshmi,
Yipperpatta shubha dhinathai -neeyum,
BHaktharkalukku koduthiduvai 22
Pradakshina namaskkaram samarppayami
NOi nodikal theera vendum –yengal,
Udhyogathi Kaakka vendum –Lakshmi,
BHaktharaaga vaazha vendum -Naangal
Nalla peyar yedukka vendum 23
Prarthanaam samarpayami
Unthan varavai kaanaamal –Maththa ,
Devarellamm Kathirukkaar-Lakshmi
Punaragamanam bhavathu yendru naangal
Mangalathai paadukindrom 24
Samasthopachaaraan samarpayami
Haarathi
Mangalangal yengal grahathil ,
Yeppozhuthum nadakka vendum –Lakshmi
Mangala vaadhyam Mangala Varthaigal -Yengal,
Kathil yendrum olikka vendum 25
Mangalakaramai mudithu vaithai-neeyum ,
Mangalam pada vaithai Lakshmi
Padungal mangalam yellarum
Mangalam Mangalam Mangalam 26
Vedoktha poojai seivaar silar,
Sasthroktha poojai seivaar silar –Lakshmi
Then poal intha gaanathai paadi -naangal ,
Geethopacharam seithom 27
Geethopacharam-Worship by song in english
Some people worship you using sastras
Some people doi worship equal to Sastras-Lakshmi,
By singing this honey like song –we ,
Will off er you worship my sing 1
Meditating your face from which,
Beauty drips we-Oh Lakshmi,
For us to get your power ,
We would ritual of inviting you . 2
Dhyayami-Aavahayami
Where would we go ,
For a gem studded throne,
Please accept this small seat ,
With love and affection 3
Rathna simhasanam samarpayami
We have brought pure water ,
For you to wash you feet-Oh Lakshmi,
WE will clean your divine feet ,
And then we will decorate it. 4
Padhayo Paadhyam samarpayami
With pure very perfumed water ,
IN which sandal and flowers are added = Oh Lakshmi,
WE would give you water for drinking ,
In your hands which bless 5
Arghyam SAmarpayami
For your inner purification -we ,
Would give you water thrice-Lakshmi,
For removing our three types of sins,
You please drink the water thrice. 6.
Aachamaneeyam samarpayami
Oh Lakshmi, for auspicious events,
To occur in our home for ever,
I have mixed honey with cow’s milk,
And we are offering you Madhuparka7
Madhu parkam samarpayami
I have mixed cardamom , saffron ,
Along with pure camphor , Oh Lakshmi,
Along with water from ganges,
And we are offering it to you for bathing 8
Snanam Samarpayami, Snana anantharam Achamaneeyam Samarpayami
We would make you wear small ,
Dresses made of silk, Oh Lakshmi,
And like the shine of your body,
Our entire family would shine9
Vasthra Uthareeyam Samarpayami
Oh Lakshmi along with sacred thread,
I would make you wear ornaments,
So that your body shines and for ,
Our wealth to be forecer, we would be overjoyed 10
(ifyou are worshipping a Goddess , still you can make her wear Sacred thread)
Yajnopa Vitha AAbharanaan
Oh Lakshmi for all luck to be forever,
For all the ladies of our home, we would,
Decorate you with sandal paste ,
Kumkum as well as Akshatha 11
Gandakshathaan samarpayami
Oh Lakshmi we would mix Kanakambara,
And fresh jasmine buds and make garlands for you,
And we will make you wear in yor neck,
So that weddings happen in our home12
Pushpa maalaam samarpayami , Pushpai poojayami
Oh Lakshmi we would mix Dasanga powder,
Along with sweet smelling Sandal powder,
Add different type of scented flowers,
And show you smoke of incense 13
Dhoopam Agrapayami
Oh Lakshmi we would show you ,
Lamp of ghee which protects married ladies,
And you please protect for ever,
The lights of our family. 14
Dheepam agrapayami
Dhoopam dheepanantharam aachamaneeyam samarpayami
Oh Lakshmi we would give you Kheer with fruits,
Several type of sweets after chanting manthras,
And when we do this , Goddess dess ,
Annapurni would forever bless us. 15
Naivedhyam nivedhayaami , Madhya madhye
Amrutha paaneeyam samappayami, Amruthapi dhanamasi
AAchamaneeyam samarppayami
Oh Lakshmi we will offer you betel leaves,
Which are not less than five and betel nuts,
And we are offering this THamboola,
So that your mouth becomes red like blood 16
Karpoora thamboolam nivedhayaami
SAmasthopachaaraan samarppayami
Oh Lakshmi within a second all the ,
Five great crimes would vanish,
When we show you the five flamed lamp,
AS you would become greatly happy. 17
Pancha mukha dheepam samarpayami
Oh Lakshmi we would burn camphor for yopu,
With Vedas and musical instruments booming ,
And please accept this Harathi ,
So that any mistakes we have committed will end 18
Karpoora neerajaamm darsyami , Aachamaneeyam samarppayami,
Rakshaam dhaarayami
Oh Lakshmi we would give you flower of chants,
By chanting the manthra sreem and we would offer,
Golden flowers, Parijatha flowers, and,
Fans as well as Chowries 19
Manthra pushpam samarpayami-Suvarna pushpam samarpayami ,
Parijaatha pushpam samarpayami -Chathra chaamarathao samastha upachaaraan samarpayami
Oh Lakshmi all the sins that we have committed,
IN this birth as well as in previous births,
Would one by one would get destroyed,
When we go round and round you . 20
WE will chant Manthras and go,
Round and round our own soul, Oh Lakshmi,
And over passage of time , all ,
Our sins of earlier births will get reduced21
OH Lakshmi , With folded hands ,
After saluting you we are requesting you,
Please give such good days,
To all your devotees 22
Pradakshina namaskkaram samarppayami
Diseases and sickness of ours should vanish,
You have to protect our jobs, Oh Lakshmi,
We should live as yyour devotes,
And we should earn a good name 23
Prarthanaam samarpayami
Oh Goddess unable to see you coming,
All the other devas are waiting, Oh Lakshmi,
And we are singing with auspiciousness,
That you should come again and agai
Samasthopachaaraan samarpayami
Haarathi
Auspicious things should always,
Happen in our home , Oh Goddess dess Lakshmi,
Auspicious instruments and auspicious sounds,
Should always fall in our ears 25
You have made this end in an,
Auspicious way , Oh our Lakshmi,
Please all of you sing “Auspiciousness”.
Auspiciousness . Auspiciousness , Auspiciousness
Oh Lakshmi , Very few people only would worship as per Vedas,
Some few more people may worship according to Sastras
WE have worshipped you by offering a musical prayer,
By singing this honey like song

No comments: