Saturday, February 27, 2021

Jeya Jeya Maruthiye –prayer to Hanuman

 Jeya  Jeya  Maruthiye –prayer  to Hanuman

 

Translated by

P.R.Ramachander

 

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி

அஞ்சிலே ஒன்று ஆறு ஆக்க , ஆருயிர் காக்க ஏகி

அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு கண்டு அயலார் ஊரில்

அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான்.

 

Anjile ondru petran  , anjile ondrai  thaavi

Anjile  ondru aaru aakka, aar   aaruyiruyir   kaakka yeki

Anjile  ondru pethra   anangu kandu ayalaar  ooril

Anjile  ondru vaithaan , avan nammai  alithu kaappan

 

He whowas  born to one of five(wind), jumped  towards  one of five(sky)

Made  one of the five(sea) in to a riven and went to protect an important life

And saw the  lady  born to one of five(earth) and in a  city of foreigners

Kept  one of the five(fire)  and let  him grant to us   and protect us

 

வடை மாலை சாற்றியே  வழிபட்டு  

நின்றென்னை    கடையேனை காத்திடுவாய் !

உந்தன் சந்நிதி வந்தேனே  சந்தனலங்காரா !      சங்கடம் தீர்த்திடுவாய்! 

உந்தன் சேய் என்னை காத்திடுவாய்!

 ஜெய ஜெய மாருதி  ஜெய ஜெய மாருதி  ஜெய ஜெய மாருதியே

 ஜெய ஜெய மாருதி  ஜெய ஜெய மாருதி  ஜெய ஜெய மாருதியே

 

Vadai  malai chathiye vazhipattu , nindra

Yennai  kadayenai  kaathiduvai

Undhan   sannithi vanthene  chandana   alankara

SAnkadam  theerthiduvai

Undhan chei yennai kaathiduvai

Jaya jaya  maruthi  , Jaya  Maruthi  , Jaya jaya  maruthiye

Jaya jaya  maruthi  , Jaya  Maruthi  , Jaya jaya  maruthiye

 

When  I put on you garland of vadais and stood,

Please  protect me   as the last one

I came before your temple, Lord  decorated by  sandal

Please  put am end to my sorrow

Please me as I am your  child

Hail, hail , Hanumam, Hail  Hanuman , Hail hail Hanuman

Hail, hail , Hanumam, Hail  Hanuman , Hail hail Hanuman

 

வாயு குமாரனே வானர வீரனே வணங்கியே கை தொழுவேன்

எந்தன் ஆயுள் முழுவதும் அருள் புரியாவிடில் அடிகளிலே அழுவேன் !

உன் திருவடிகளிலே விழுவேன் !....................ஜெய ஜெய மாருதி………

 

Vayu kumarane  , vanara  veerane, vanangiye  kai  thozhuven

Yenthan  aayul  muzhuvathum  arul  puriyavidil  adikalile   azhuven

Un   thiruvadikalile vizhuven (Jaya maruthi..)

 

Oh son of wind god, the monkey hero, I will salute you and then salute with  folded hands

If you  do not bless  me  all my life, I will   cry at your feet

I will  fall at your divine feet (Hail  Hanuman…)

 

கடலினை தாண்டியே கணையாழி கொடுத்திட்ட காருண்ய மூர்த்தி அய்யா !

எந்தன் உடலினை தாண்டியே உள்ளத்தில் அமர்ந்து ஊக்கத்தை தாருமய்யா!  

எந்தன் ஏக்கத்தை தீருமய்யா ! ....................ஜெய ஜெய மாருதி……….

 

Kadalai thandiye kanayazhi  koduthitta  karunya moorthy ayya

Yenthan  udalinai  thandiye ullathil amarnthu ookkathai  thaarum ayya

Yenthan yekkathai  theerumayya    (Jaya  Maruthi..)

 

Oh  merciful  lord who crossed the ocean and gave the signet  ring

Please  cross  my body by jump and grant me enthusiasm

Please  put an end to my sufferings(hail  Hanuman..)

 

..

வாழ்வில்  அகப்பட்டு கருத்து சிதறினும் கருணையுடன் அருள்வாய்

என்னை ஊணுறக்கம் இன்றி உனையே நினைக்கும் ஓர் உத்தமனக்கிடுவாய் !

உந்தன் பக்தனும் ஆக்கிடுவாய் ! ....................ஜெய ஜெய மாருதி………

 

Vaazhvil  akapattu  karuthu  chidarinum  karunayudan   arulvai

Yennai  oon urakkam   indri   unaye  ninaikkum  oar  uthamanaakkiduvai

Undhan bhakthanum  aakkiduvai  (Jaya Maruthi..)

 

Even if my thoughts shatter  n, caught in this life, please  bless me   with mercy,

Make me a great one who keeps on thinking you without food and sleep

Make   me your devotee (Hail Hanuman..)...

 

தான் எனது என்று தவறிப்  போய்  கூறினும் தவறினை நீ திருத்து!

தனயனின் தவறினை நீ திருத்து

இனி நான் என்று சொல்லுமென் அகந்தையை ஒழித்துன் ஆதிக்கத்தை செலுத்து!

உந்தன் ஆதிக்கத்தை செலுத்து! ...................ஜெய ஜெய மாருதி………...

 

Thaan , yenathu   yendru  thavari poi  koorinum  nee thiruthu

Thanayanin  thavarai nee thiruthu,

Ini nan  yendru chollum  yen akanthayai ozhithu   un adhikkathai  cheluthu

Un adhikkathai   cheluthu, (Jaya  Maruthi..)

 

If ny mistake I say me  or mine  please  correct me

Please  correct  mistake  of your son

Please destroy  my pride making me say me  and mine and establish your  rule

Establish your rule  (Hail  Hanuma,,,)

No comments: