Tuesday, September 12, 2017

Namam Japikkuga in Tamil

Namam Japikkuga in Tamil

Translated in to Tamil by
Geetha Kalyan

(My heart felt thanks to her)

சமீபத்தில் திரு மாவிலிச்சேரி சுப்ரமண்யன் நம்பூதிரி இயற்றிய "நாம.ம் ஜபிக்குக" என்ற மலையாளப்பாணலை திரு Puducode Rama Iyer Ramachander அவர்கள் ஆங்கில உரையுடன் மீள்பதிவு செய்திருந்தார். அதன் தமிழாக்கம் அடியேனுக்கு அறிந்தவரை இங்கே பதிவிடுகிறேன். சரீரத்திலிருந்து உயிர் பிரியும் தறுவாயில், அஜாமிளனைப் போல் எப்பேர்ப்பட்ட பாபியாக இருந்தாலும் ஹரி ஹரி என்று பகவன் நாமாவைச் சொல்லும் வாய்ப்பைக் கொடுக்க இறைந்ஞி வேண்டும் துதியாக இது அமைந்துள்ளது. "மனம் எண்ணிடுமோ தெரியாது.. ஹரி நாராயணா" என்ற பாடலும், "அந்த:க்காலே ச மாம் ஏவம் ஸ்மரன்" என்ற கீதா வாக்கியத்தை மஹாபெரியவா விரிவாக விளக்கியிருப்பதும் நினைவில் வருகிறது. குருக்ருபையில் இறை நினைவு வர ப்ரார்த்திக்கின்றேன்🙏🙏🙏🙏🙏
1. நாவும் குழையாமல் நாம ம் செபித்திட
இயலவும் வேண்டுமே நாராயணா ஹரே!
நாராயணா ஹரே நாராயணா ஹரே
நாராயணா ஹரே நாராயணா!!
2. மோஹம் பலதும் நிறைவேறிடாமலே
தேஹம் மெலிந்தொரு கிழவனானேன் ஹரே!
வியாதியும் வந்து அகப்பட்டுக்கொண்டு நான்
வேதனையோடு கிடக்கும் தருணத்தில் (நாராயணா ஹரே)!!
3. வந்தவை போகாமல் வெவ்வேறு வியாதிகள்
மீண்டும் மீண்டும் வந்து தொல்லை கொடுக்குதே
தேஹம் முழுவதும் கைவசப்படுத்தியே
தாஹியை இப்படி வாட்டி வதைக்கையில் (நாராயணா ஹரே)!!
4. மெய்யும் தளர்ந்து அவசனாக ஒன்றும்
செய்ய இயலாமல் கை கால் குழைந்து நான்
மலம் நிறைந்த தேஹமாம் படுக்கையில்-பெரும்
பாம்பினைப் போல் படுத்துக் கிடக்கவே (நாராயணா ஹரே)!!
5. சற்றே சாய்ந்து படுக்கவும் கால்களைச்
சற்றே மாற்றி வைக்க இயலாமல்
முட்டிக்குமுட்டி வேதனை தாங்காமல்
செய்வதறியாது திகைக்கின்ற வேளையில் (நாராயணா ஹரே)!!
6. கையிலும் காலிலும் வீக்கம் வந்து ரத்த-
மில்லாமல் தேஹமும் வெளிர்த்தொரு தேஹியை
ஆசைகளேதேனும் உண்டென்றால் நிறைவேற்ற
உரைசெய்த வைத்தியனும் கைவிட்ட வேளையில் (நாராயணா ஹரே)!!
7. ஒன்றுக்கும் உதவாத அசிங்கமாம் தேஹத்தை
எப்பொதும் மலத்தில் புதைந்து கிடப்பதை
ஒருபோதும் இவ்வுடலை கைவிட ஒவ்வாமல்
என்னுடைய மானஸம் மாழ்கிடும் வேளையில் (நாராயணா ஹரே)!!
8. மாரக வியாதிகள் ஒன்றாகச் சேர்ந்துமென்
மெய்யில் அதிகாரம் செய்யத் தொடங்குதே
சொல்ல முடியாதவருத்தங்கள் வாட்டுதே
எல்லையில்லா துக்கம் பின்னிப் பிணைக்குதே (நாராயணா ஹரே)!!
9. கிஞ்சித்துச் சதையும் மேதஸ்ஸ்மில்லாமல்
எலும்பும் தோலுமாய் மாறின மெய்யுடன்
காண்பதற்க்கோ வெறும் பிணத்தினைப் போலவே
நீண்டு மல்லாக்கக் கிடக்கின்ற வேளையில் (நாராயணா ஹரே)!!
10. இழுத்துப் பிடிக்கின்ற வீங்கின வயிறுடன்
எலும்புகள் துருத்திக் கொண்டிருக்கும் உடம்புடன்
தோலில் பொதிந்தவோர் அஸ்திகூடம் போன்று
கால்களை நீட்டத் துவங்கிடும் வேளையில் (நாராயணா ஹரே)!!
11. நூறாயிரம் கூர்த்த முட்களும் குத்திடும்
ஏராளம் வேதனைக்காளாகிக்கிடக்கையில்
முன்னில் நின்றிந்த ஜீவசைதந்யத்தைக்
காலன் பிடித்துப் பறிக்கும் தருணத்தில் (நாராயணா ஹரே)!!
12. உதடுகள் ரெண்டும் கிழிந்து பல்லுந்தி
கண்ணிரண்டும் குழிந்து வாய் பாதி திறந்து
காணவே விக்ருதமாம் ரூபத்துடன் கூட
மரணச்வாஸமும் இழுக்கின்றவேளையில்(நாராயணா ஹரே)!!
13. தீயிலூதிப் பழுப்பித்த கம்பிகள்
மெய்யில் குத்தி ஏற்றும்போல் ஊர்த்வமும்
தேஹத்திலுள்ள தேஹியாம் ப்ராணனை
தேஹத்தை விட்டு அகற்றும் தறுவாயில் (நாராயணா ஹரே)!!
14. எல்லாம் துறந்து பிரிகின்ற வேளையில்
எல்லோர்க்கும் பயத்தைக் கொடுக்கின்ற நேரத்தில்
சொந்தங்கள் பந்தங்கள் சுற்றங்களெல்லோரும்
விட்டுவிலகிடும் வன்துன்ப வேளையில்
(நாராயணா ஹரே)!!
15. எத்தனை துஷ்கர்மம் செய்த அஜாமிளன்
மைந்தனைப் பார்த்து பெயரொன்றுரைக்கவே
பக்தனாக்கி அவன் தேஹியை கைதூக்கி
காத்த நாராயணா என்னையும்காப்பாயே !!
நாராயணா ஹரே நாராயணா ஹரே
நாராயணா ஹரே நாராயணா!!
நாராயணாஹரே நாராயணா ஹரே நாராயணா ஹரே நாராயணா!!!!

No comments: