The tamil stotra to pray Lord Ranganadha of Sri Rangam
Translated
by
P.R.Ramachander
காவிரியின் நடுவில் ஏழு திருமதில்களால் சூழப்பட்ட ஸ்ரீரங்கநாதனே!
தாமரை மொட்டுபோன்ற விமானத்தில் குடிகொண்டவனே!
ஆதிசேஷன்
என்னும் கட்டிலில் துயில்பவனே!
யோகநித்திரையில் அனைத்தையும் அறிந்தும் அறியாதது போல இருப்பவனே!
இடது கையை இடுப்பில் வைத்திருப்பவனே!
ஸ்ரீதேவியும் பூதேவியும் வருடுகின்ற திருப்பாதங்களைக் கொண்டவனே!
ஸ்ரீரங்கநாதா! உன்னைப் போற்றுகிறேன்.
Kaviriyin naduvil yezhu thiru mathilkalaal choozha petta Rangandhane!
Thamarai mottu pondra vimanathil kudi kondavane!
AAdhi seshan yenum,kattilil thuyilbavane
Yoga Nidhrayil anaithayum arindhum ariyathathu poal iruppavane
Idathu kayai iduppil vaithiruppavanne,
Sri deviyum bhoo deviyum varudukindra thirupadhangalai kondavane
Sri Ramnganadha unnai potrukiren
Oh Ranganadha who is surrounded by seven rings of walls situated in the middle of Cauvery river
He who lives on a spire above him which looks like lotus bud
He who sleeps on a cot called Adhisesha
He in yogic sleep appears as if he does not know anything , though he knows everything
He who keeps his left hand on his hip
He who has divine feet massaged by Goddess Lakshmi and Goddess earth
Oh Ranganadhe I
praise (Pray to ) you
கஸ்தூரி திலகமிட்ட நெற்றி கொண்டவனே!
காது வரை நீண்டிருக்கும் அகன்ற கண்களைப் பெற்றவனே!
முத்துக்கள் இழைத்த கிரீடம் அணிந்தவனே!
பக்தர்களின் மனதைஅபகரிக்கும் தேக காந்தி கொண்டவனே!
தாமரைமலருக்கு
ஈடான அழகுமிக்கவனே!
ஸ்ரீரங்கநாதா! உன்னைக் காணும் பாக்கியம் எப்போது எனக்கு கிடைக்கும்!
Kasthuri thilakamitta netri kondavane
Kaathu varai neendirukkum akandra kankalai petravane
Muthukkal izhaitha kireedam aninthavane
Baktharkalin manathai apakarikkum deha kanthi kondavane
Thamarai malarukku eedaana azhaku mikkavane
Sri Ranganadha , unai kaanum bhagyam yeppozhuthu yenakku kidaikkum
Lord with Kasthuri(musk) thilaka on forehead
He who has broad eyes which extend up to your ears
He who wears pearl studded crown
He whose luster of the body steals the mind of dvotees
He who has the beauty of lotus flower
Oh Ranganadha ,
when I will get the luck to see
you
மது என்னும் அரக்கனைக் கொன்றவனே!
நாராயண மூர்த்தியே! முரனை வென்ற முராரியே! கோவிந்தராஜனே!
உன் திருநாமங்களை உரக்கச் சொல்லி வாழ்நாளை எல்லாம் ஒரு நிமிஷம்போல கழிக்கும் பாக்கியம் எனக்கு கிடைக்குமா?
காவிரிக்கரையோரம் வாழ்பவனே!
இந்திர
நீலமணி போன்ற பேரழகுடன் ஆதிசேஷ சயனத்தில் படுத்திருப்பவனே!
உன் அருகில் வாழும் பாக்கியத்தை தந்தருள வேண்டும்.
Madhu yennum arakkanai kondravane
Narayana moorthiye, muranai kondra murariye, govinda Rajane
Un thirunamangalai urakka cholli vaazh nalau yellam , oru nimisham poala kazhikkum BHagyam yenakku kidaikkumaa
Cauvery kara oaram vaazhbavane,
Indra neela mani pondra perazhagudan aadhi sesha sayanathil paduthiruppavane
Un arukil vaazhum bhagyathai thantharula vendum
Oh Lord who killed Asura called Madhu
Oh Narayana Moorthi , Oh Murari who killed Mura, Oh Govindaraja
Will I get the luck to chant your names loudly all my life and spend it like one minute
Oh Lord who lives on Bank of Cauvery river
He who lies down on Adhisesha with a great beauty like Blue
Sapphire
Please give me the luck to stay
near you
பெருமானே! புனிதமான காவிரியில் நீராடும் பாக்கியம் எனக்கு வேண்டும்.
அடர்ந்த
பசுமரங்கள் நிறைந்த அழகுமிக்க காவிரி நதிதீரத்தில் நான் வசிக்கும் பேறு பெற
வேண்டும்.
மங்கலம் நிறைந்தவனே! தாமரை மலர் போன்ற கண்களைப் பெற்றவனே!
உன்னை பக்தியோடு வணங்கும் பாக்கியத்தை அருள்புரிவாயாக.
Perumaane, Punithamaana Cauviriyil neeraadum bhagyam yenakku vendum
Adarntha pasu marangal niraintha azhagu migu Cauvery nadhi theerathil Naan vasikkum peru pera vendum
Mangalam nirainthavane, thamarai malar pondra kankalai petravane
Unnai bakthiyodu vanangum BHagyathai arul purivayaka
Oh Lord , I want to get luck to take bath in the holy Cauvery
I should get the luck to live in shore of the pretty Cauvery river with dense green trees
Oh Lord who is
full of auspiciousness who has
eyes like the lotus flower
ரங்கநாதனே! பாக்கு மரங்கள் நிறைந்ததும்,
தெளிந்த
நீரால் நிரம்பியதும்,
வேதகோஷத்தால் சூழப்பட்டதும்,
கிளி,
குருவி போன்ற பறவைகள் ஒலியெழுப்புவதும்,
தரிசித்தவர்க்கு வைகுண்டம் தந்தருளி மோட்சத்தைக் காட்டுவதுமான
லட்சுமிகடாட்சம் நிறைந்த ஸ்ரீரங்கத்தை தரிசிக்கும் பாக்கியம் எனக்கு என்று கிடைக்குமோ?
Ranga nadhane, paakku marangal nirainthathum,
Thelintha neeraal nirappiyathum
Veda goshathaal choozha pattathum,
Kili Kuruvi pondra paravaikal oli yezhuppuvathum
Darisathavarkku Vaikuntam thanthu aruli, mokshathai kaattuvathum aanna
Lakshmi kadaksham niraintha Sri Rangathai darisikkum Bhagyam yenakku yendru kidaikkumo?
Oh Ranganadha,when will I get the luck of seeing Sri Rangam
Which is full of arcanut trees,
Which is full of very clear water
Where parrots and birds raise their sound
Which grants Vaikunta to those who see it and shows salvation
Which is full of the sight of Goddess Lakshmi
எம்பெருமானே! தேவலோக நந்தவனத்தில்
அமிர்தம் அருந்தும் பாக்கியம் எனக்கு வேண்டாம்.
தேவர்களில் ஒருவராகவும் நான் மாற வேண்டாம்.
ஸ்ரீரங்கத்தில் ஒரு நாயாக வாழும் பாக்கியத்தைக் கொடுத்தால் போதும்.
Yem perumaane, deva loka nanda vanathil
Amirtham arunthum BHagyam yenakku vendaam
Devarkalil oruvanaakavum naan maara vendaam
Sri Rangathil oru naayaaka vaazhum bhagyathai koduthaal pothum
Oh My God, I do not want luck of deinking nectar,
In the garden of the land of devas
I do not want to become one of the devas
It is sufficient if you give me luch of living as a dog
in Sri rangam
அம்மா! எனக்கு மிகவும் பசிக்கிறது. உடல் நடுங்குகிறது,'
என்று
சொல்லும்குழந்தையிடம்
தாய் எப்படி பாசத்தோடு
ஓடி வந்து அணைத்து ஆகாரம் தருவாளோ
அதுபோல...ரங்கநாதா! என் துயரத்தைப் போக்க வந்தருள்வாயாக.
Amma , yenakku migavum pasikkirathu, Udal nadungugirathu
Yendru chollum kuzhanthayidam, thai yeppadi paasathodu
Odi vanthu anaithu aahaaram tharuvaalo
Athu poala , Ranganadha , yen thuyarathi pokka vanthu arulvaayaaka
Like a mother who will run with affection to child
And embrace him as well as feed him
Who tells ,Oh mother , I am hungry and my body is shivering
Oh Ranganatha Please come to drive away my sorrow

No comments:
Post a Comment