Wednesday, May 6, 2015

THiruKOLili Thevara Thirupathikam

The Lord at ThiruKoLilli (KoLilliNaathar/Brahmapureswarar பிரமபுரீசுவரர்/கோளிலிநாதர்) is believed to have removed the faults of the Navagrahas.
The Navagrahas in the temple are in a straight line facing South.
The below ThiruPathikam by ThiruGnanaSambandar is believed to appease the Navagrahas.
திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த திருக்கோளிலி தேவாரத் திருப்பதிகம் (முதல் திருமுறை 62வது திருப்பதிகம்)    
Transliteration/Translation – 

 Elango Kadhirvel


நாள்ஆய போகாமே, நஞ்சு அணியும் கண்டனுக்கே
ஆள்ஆய அன்பு செய்வோம்; மட நெஞ்சே! அரன்நாமம்
கேளாய்! நம் கிளைகிளைக்கும் கேடு படாத் திறம் அருளிக்
கோள்ஆய நீக்குமவன் கோளிலி எம்பெருமானே.
NaaL-Aaya Pokaame, Nanju-aniyum Kandanukkuke
AaL-Aaya anbu seivom; mada nenje! Aran-Naamam
KeLaai! Nam KiLaiKiLaikkum Kedu padath thiram aruli
KoL-Aaya Neekkum Avan KoLili EmPerumane.
O Mind!
Lets always think of the LORD SHIVA at ThiruKoLilli who has the HalaHala poison in HIS Neck, before we lose out on our passing days;
The LORD at ThiruKoLilli removed the defects of the Planets (Navagrahas)
We shall be in love with HIM always;
WE shall chant HIS Divine Names always;
By doing so, our kith and kin will always be protected from vice by HIS GRACE and be BLESSED with bliss.

ஆடுஅரவத்து, அழகு ஆமை, அணி கேழல்கொம்பு, ஆர்த்த
தோடுஅரவத்து ஒரு காதன், துணைமலர்நல்சேவடிக்கே
பாடு அரவத்து இசை பயின்று, பணிந்து எழுவார்தம் மனத்தில்
கோடரவம் தீர்க்குமவன் கோளிலி எம்பெருமானே.
Aadu-aravathu, azhagu aamai, ani Kezhal-kombu, aartha
Thodu-aravathu oru kaathan, thunai-malar-nal-sevadike
Paadu-aravathu isai payindru paninthu yezhuvaar tham manath-thil
Kodaravam theerkum-avan KoLili EmPerumane.
Lord Shiva at ThiruKoLilli!
Who adorns a dancing cobra, beautiful tortoise shell and a hog’s tusk!
That LORD removed distress from the minds of HIS Devotees who wake up worshipping HIS Divine Feet and singing HIS Praise.

நன்று நகு நாள்மலரால், நல் இருக்குமந்திரம்கொண்டு,ஒன்றி வழிபாடு செயல்உற்றவன்தன் ஓங்கு உயிர்மேல்
கன்றி வரு காலன் உயிர் கண்டு, அவனுக்கு அன்று அளித்தான்
கொன்றைமலர் பொன்திகழும் கோளிலி எம்பெருமானே.
Nandru nagu NaaL-malaraal, nal irukkum-manthiram-kondu,
Ondri vazhipaadu seyal-utthravan-than Ongku UyirMel
Kandri varu kaalan uyir kandu, avanukku andru aLith-thaan
Kondrai Malar Pon-thikazhum KoLili EmPerumane.
Lord Shiva at ThiruKoLilli!
The Lord is adorned with shining Konrai flowers!
Moved by the sincere Japa and Pooja (done with fresh flowers) of Markandeya, The Lord protected Markandeya from Yama and bestowed him with an eternal youthful life

வந்த மணலால் இலிங்கம் மண்ணயின்கண் பால்ஆட்டும்
சிந்தைசெய்வோன்தன் கருமம் தேர்ந்து சிதைப்பான் வரும் அத்
தந்தைதனைச் சாடுதலும், சண்டீசன் என்று அருளி,கொந்து அணவும் மலர் கொடுத்தான் கோளிலி எம்பெருமானே.
Vantha MaNalaal ilLingam MaNNayin-kaN paal-aattum
Sinthai-seiVon-than karumam ther-inthu sithaippaaan varum ath-
Thanthai-thanai saaduthalum, Sandeesan endru aruli,
Kointhu anavum malar koduthaan, KoLili EmPerumane.
Lord Shiva at ThiruKoLilli!
Visarasarumar (CHANDESHWARA NAYANAR), created a LINGA on the banks of the MaNNi river and worshipped the LINGA with Milk Abhiseka. Visarasarumar’s father Yetchathathan, reprimanded Visarasarumar for wasting the Milk, the LORD appeared and placed Konrai flowers on the head of Visarasarumar  and anointed him as CHANDESHWARA NAYANAR Yetchathathan

வஞ்ச மனத்து அஞ்சு ஒடுங்கி, வைகலும் நல் பூசனையால்,நஞ்சு அமுதுசெய்துஅருளும் நம்பி எனவே நினையும்
பஞ்சவரில் பார்த்தனுக்குப் பாசுபதம் ஈந்து உகந்தான்
கொஞ்சுகிளி மஞ்சு அணவும் கோளிலி எம்பெருமானே.
Vanja manath-thu, anju oduki, vaikalum nal poosanaiyaal
Nanju amudhu seithu aruLum nambi enave ninaiyum
Panchavaril Paarthanukku paasupatham eeindhu uganthaan
Konju KiLi manju aNavum KoLili EmPerumane.
Lord Shiva at ThiruKoLilli! The Lord turns poison to nectar!
The Lord granted only Arjuna, the “Paasupatham” amongst the Pandavas, for the LORD was moved by intense and sincere Pooja done by Arjuna (Partha)
The Lord resides at ThiruKoLilli, where parrots fly very high, almost touching the clouds

தாவியவன் உடன்இருந்தும் காணாத தற்பரனை,ஆவிதனில் அஞ்சு ஒடுக்கி, அங்கணன் என்று ஆதரிக்கும்
நா இயல் சீர் நமிநந்தியடிகளுக்கு நல்குமவன்
கோ இயலும் பூ எழு கோல் கோளிலி எம்பெருமானே
Thaavi-avan udan irunthum kaaNaatha thaRparanai
Aavithanil anju odukki, angaNan endru aatharikkum
Naa eyal seer nami-nanthi-adikalluku nalkum-avan
Ko iyallum poo ezhu Kol KoLili EmPerumane.
Lord Shiva at ThiruKoLilli!
Lord Vishnu who measured the World, did not realize that HE (Lord Vishnu) was always with the Lord Shiva as HIS Half
The Lord at ThiruKoLilli, granted HIS Grace to NamiNandhi Adiyaar (devotee) who always praised Lord Shiva with complete control of mind and soul

கல்-நவிலும் மால்வரையான், கார் திகழும் மாமிடற்றான்,சொல்-நவிலும் மாமறையான், தோத்திரம்செய் வாயின் உளான்,மின் நவிலும் செஞ்சடையான்; வெண்பொடியான், அம் கையினில்
கொல்-நவிலும் சூலத்தான் கோளிலி எம்பெருமான்.
Kal-navillum Maalvaraiyaan, kaar thikazhum maa-midattraan,
Sol-navillum maa-maraiyaan; soththiram sei vaayin uLLaan,
Min navillum sengchadaiyaan; VeN-podiyaan, am kaiyinil
Kol-navillum Soolath-thaan KoLili EmPerumane.
Lord Shiva at ThiruKoLilli!
Resides at Mount Kailash, Has HIS Throat blackended by the HalaHala poison!
The Lord Holds the Holy Vedas which are loudly recited;
The Lord Resides in the Mouth of HIS Devotees who recite HIS Nama/Praises;
The Lord who matted locks are shining red, and has HIS Body smeared with White Ash – Holds a Trident in HIS Hand

அந்தரத்தில்-தேர் ஊரும் அரக்கன் மலை அன்று எடுப்ப,சுந்தரத் தன் திருவிரலால் ஊன்ற, அவன் உடல் நெரிந்து,மந்திரத்த மறை பாட, வாள் அவனுக்கு ஈந்தானும்
கொந்து அரத்த மதிச் சென்னிக் கோளிலி எம்பெருமானே.
Antharathil-Ther oorum arakkan malai andru yeduppa,
Sundarath than thiru-viralaal oondra, avan udal nerinthu,
Manthirath-tha marai paada, vaal avanukku einthaanum
Konthu aratha mathith sennik KoLili EmPerumane.
Lord Shiva at ThiruKoLilli!
When Ravana tried to uproot the Mount Kailash, the LORD used HIS beautiful toe and crushed Ravana
Realising his mistake, Ravana recited Vedic Hymns pleading mercy, the LORD showered mercy and gifted Ravana a sword (Chandrahaasam)

நாணம் உடை வேதியனும் நாரணனும் நண்ண ஒணாத்
தாணு, எனை ஆள்உடையான், தன் அடியார்க்கு அன்புஉடைமை
பாணன் இசை பத்திமையால் பாடுதலும் பரிந்து அளித்தான்
கோணல்இளம்பிறைச் சென்னிக் கோளிலி எம்பெருமானே.
NaaNam udai Vethiyanum NaaraNannum naNNa onaath
thaaNu, enai aaL-udaiyaan, than adiyaarkku anbu-udaimai
PaaNan isai pathimaiyaal paaduthalum parinthu aLith-thaan
KoNal ILamPiRaich chennik KoLili EmPerumane.
Lord Shiva at ThiruKoLilli!
The Lord is beyond the perception of Lord Sri Vishnu and Lord Brahma (who gets ashamed when HE loses one of five heads)!
The LORD has me as HIS Slave!
The LORD moved by the devotion of PaaNan, Blessed PaaNan with Bounty
The LORD wears a crescent!

தடுக்கு அமரும் சமணரொடு தர்க்கசாத்திரத்தவர் சொல்
இடுக்கண் வரும் மொழி கேளாது, ஈசனையே ஏத்துமின்கள்!நடுக்கம் இலா அமருலகம் நண்ணலும் ஆம்; அண்ணல்கழல்
கொடுக்ககிலா வரம் கொடுக்கும் கோளிலி எம்பெருமானே.
Thadukku amarum samaNarodu tharka-saathi-raththavar sol
idukkaN varum mozhi KeLaathu, isanaiye yethuminkal!
Nadukkam ilaa amar-ulagam naNNalum aam; aNNal-kazhal
Kodukak-kilaa varam kodukkum KoLili EmPerumane.
Lord Shiva at ThiruKoLilli!
People of the World, ignore the slander on Non-Believers of the LORD!
Always Praise LORD Shiva at KoLili, who gives entry of the world of the Immortal and gives abundance to HIS Devotees

நம்பனை, நல் அடியார்கள் நாம் உடை மாடு என்று இருக்கும்
கொம்புஅனையாள்பாகன், எழில் கோளிலி எம்பெருமானை,வம்பு அமரும் தண் காழிச் சம்பந்தன் வண்தமிழ்கொண்டு
இன்பு அமர வல்லார்கள் எய்துவர்கள், ஈசனையே.
Nambanai, nal adiyaarkaL naam udai maadu endru irukkum
Kombu anaiyaaL-paagan, ezhil KoLili emPerumaanai,
Vambu amarum thaN Kaazhich Sambanthan vaNThamizhkondu
Inbu amara valaarkal eithuvaarkal – Esanaye!
Devotees who reside the chants (praising the LORD at ThiruKoLilli)of GnanaSambandan, who was born at Seergaazhi - will ultimately reach the Lord (Who HAS Uma Devi in HIM)

No comments: