Friday, February 20, 2026

கண்ணே என் செல்லமே - My darling , my chellam

 கண்ணே என் செல்லமே -

My darling , my chellam

A song by
Raja Sekaran

Ragam
Kapi




(My friend and cousin who lives in TRichur read my post , wrote a song and send it to me
I have heard it several times with eyes full of tears

நாராயணீயம் நாவில் நின்றாட

திருப்புகழ் பாடித் தேன் மழையூட்ட

கைவேலை வித்தகி... அறுசுவை அரசி நீ

என் உயிர் அணுவில் நிறைந்தவள் நீ!



என் பொன் செல்லமே... எங்கு சென்றாயோ?

குருவாயூரப்பன் திருவடி நிழல் அடைந்தாயோ?

நீயின்றி நானோ ஒரு சிறு பூச்சியம்

நீயே என் உலகம்... நீயே என் காவியம்!



மீரா உனக்காய் மெலிந்து போனாள்

ரமேஷ் உனைப் பார்க்கக் கடல் தாண்டி வந்தான்

மைத்ரி யாமினி உன் சிரிப்பைத் தேட

சங்கீதா ரோகன் ராகுல் அன்பில் வாட

மகன் போன்ற வெங்கடேசன் துடித்தானே...

உள்ளுக்குள் அழுதோம்... உன் முகம் தொழுதோம்!



"ஜய ரமே மனோரமே" எனப் பாட நினைத்தேன்

பாடும் முன்னே - என் பாதியாய் என்னை ஆட்கொண்டாய்!

தோழியாய்... தாதியாய்... என் மனநலத் துணையாய்...

எல்லாமாய் இருந்தவள்... இன்று ஏனோ பிரிந்தாய்?



என் பொன் செல்லமே... எங்கு சென்றாயோ?

குருவாயூரப்பன் திருவடி நிழல் அடைந்தாயோ?

நீயின்றி நானோ ஒரு சிறு பூச்சியம்

நீயே என் உலகம்... நீயே என் காவியம்!



பிள்ளைகள் மடியில் நான் இருந்தாலும்

உன் நினைவுகள் மடியில் நான் வாழ்வேன்

இறைவன் என்னை மீண்டும் அழைக்கும் வரை...

என் செல்லமே... என் பொன் செல்லமே...

My Dear Chellam

With Narayaneeyam dancing upon your tongue,
And Thirupugazh pouring down like a rain of honey,
An artist of handiwork... the queen of the six tastes,
You filled every atom of my soul!

My golden Chellam... where have you gone?
Have you found shade at the holy feet of Guruvayurappan?
Without you, I am but a tiny zero,
You are my world... you are my epic poem!

Meera wore herself thin struggling for you,
Ramesh crossed the great oceans just to see you,
Maithree and Yamini searched for your smile,
Sangeetha, Rohan, and Rahul wilted in your love,
Venkatesan, like a son, suffered in his heart for you...
We all wept within... and we worshipped your face!

I yearned to sing "Jaya Reme Manorame,"
But before I could—you took me over as my better half!
My friend... my nurse... my psychological guide...
You who were my everything... why did you part from me today?

My golden Chellam... where have you gone?
Have you found shade at the holy feet of Guruvayurappan?
Without you, I am but a tiny zero,
You are my world... you are my epic poem!

Though I rest now in the lap of our children,
I will live in the lap of your memories,
Until the day God calls me back to Him...
My Chellam... my golden Chellam...

https://www.youtube.com/watch?v=91QzPG0XARs

No comments: