Wednesday, August 12, 2020

சக்தி தாலாட்டு Sakthi thalattu


சக்தி தாலாட்டு
Sakthi   thalattu
Lullaby   to  goddess  Sakthi

By
R.SHantha

Translated  by
P.R.Ramachander

 (This  pretty lullaby  is to make   the make   Goddess  Sakthi sleep  .I  could not find out   the author. but i found it out today 25th feb 2021)
Thanks to him/her)

Shakti Devi

ஓம் சக்தி; ஓம்சக்தி ; ஓம்சக்தி ஓம்
நற்பவி நற்பவி நற்பவி ஓம்

Om SAkthi Om Sakthi  , Om Sakthi Om
Let good happen, good happen, good happen

ஆராரோ ஆரிரரோ
ஆராரோ ஆரிரரோ
Aaraaro  , AAriraaro,
Aararo  , aariraro
Lullabye  , lullabye
Lullabye  , Lullabye


கண்ணான கண்மணியோ
கரும்பான செங்கரும்போ
முத்தோ ரத்தினமோ
மோகனப் புன்னகையோ
முத்துச்சரத் தொட்டிலிலே
முக்கண்ணியே நீ உறங்காய்                    1

Kannana kanmaniyo,
Karumbana   senkarumbo,
Mutho, Rathinamo,
Mohana  punnakayo,
Muthu   sara  thottilie
Mukkanniyw   nee urangai    1

Oh dearest  of darlings,
Oh    very sweet   red sugarcane
Are you a pearl, Are you a gem,
Are you the bewitching smile
In the  cradle hung   b rope of pearls,
Oh three  eyed goddess   sleep

சிங்கார நெத்தியிலே
சிவப்புச்சுட்டி அணிந்த்தாயோ
தங்கமான காலினிலே
தண்டை கொலுசு அணிந்தாயோ
முத்தான மார்பினிலே
முத்துச்சரம் அணிந்தாயோ
கெம்பு பதித்த தொட்டிலிலே
கெளரியே நீ உறங்காய்                               2

Sungaara  nethiyile  ,
Sigappu   chutti   aninthanayo,
Thangamaana  kaalinile
THandai kolusu   aninthaayo,
Muthaana  maarbinile,
Muthu charam   aninthayo
Kembu  pathitha    thottilile
Gauriye   nee urangai  2

In your very pretty   forehead,
Did you wear   the  red brooch,
In your gold like leg,
Did you wear  anklets  that make sound,
In your   pearl like   chest,
Did you  wear  pearl  necklace
In the cradle studded   with rubies,
Oh Gauri  , you  please  sleep

வைரம் போன்ற கைகளிலே
வைரவளை அணிந்த்தாயோ
மடல் போன்ற காதினிலே
பிச்சோலை அணிந்தாயோ
மங்கை உந்தன் கழுத்தினிலே
கருகமணி அணிந்தாயோ
வைரம் பதித்த தொட்டிலிலே
வைஷ்ணவியே நீ உறங்காய்                   3

Vairam pondra  kaikalile
Vaira  valai   aninthanayo,
Madal  pondra  kaathinile
Picholai   aninthanayo,
Mangai  unthan kazhuthinile
Karuku mani   aninthaayo,
Vairam pathitha   thottinile  ,
Vaishnavi   nee kannurangaai

In your diamond like hands  ,
Did you wear  diamond bangles,
IN your   flap like  ears,
Did you wear   the  stud of gems,
Oh lady in your neck,
Did you wear   the  black gem,
In the  diamond  studded cradle,
Oh Vaishnavi  , please   sleep

கொடி போன்ற இடையினிலே
ஒட்யாணம் அணிந்தாயோ
பட்டான மேனியிலே
பட்டாடை உடுத்தாயோ
எடுப்பான மூக்கினிலே
நத்து புல்லாக்கு அணிந்தாயோ
வைடூரியம் பதித்த தொட்டிலிலே
வைதேகியே நீ உறங்காய்                          4

Kodi  pondra   idayinile  ,
Odyaanam   aninthanayo
Pattanna   meniyile
Pattadai   uduthaayo,
Eduppana   mookinile
Nathu  pullakku    aninthayo
Vaiduryam   pathitha thottilile
Vaidehiye    nee urangai   4

In you    thin hips resembling  a climbing  plant,
Did you wear   the   golden belt
Over your silk like body  ,
Did    you wear   silk,
IN your prominent  nose,
Did you wear    the diamond drops,
In the cradle  studded with cat ee gems,
Oh Vaidehi  , you please   sleep

சக்தியைக் கொடுக்கவே
சக்தியாய்ப் பிறந்தாயோ
ஞானத்தை அளிக்கவே
வாணியாய்ப் பிறந்தாயோ
கருணையைப் பொழியவே
காமாட்சியாய்ப் பிறந்தாயோ
பவளம் பதித்த தொட்டிலிலே
பார்வதியே நீ உறங்காய்                             5
Sakthiyai  kodukkave
SAkthiyai  piranthaayo,
Jnanathai   alikkave,
Vaaniyaai  piranthaayo,
Karunayai  pozhiyave,
Kamakshiyai  piranthaayo
Pavalam  pathitha  thottilile
Parvathiye   nee  Urangai      5

For   giving  us strength,
Were  you born as  SAkthi
For giving wisdom,
Were you born as   SAraswathi
For showering kindness,
Were you born as Kamakshi
In the cradle studded with pearls,
Oh Parvathi you  please sleep

ஐஸ்வர்யம் அளிக்கவே
அஷ்டலக்ஷ்மியாய்ப் பிறந்தாயோ
துன்பம் துடைக்கவே
துர்க்கையாய்ப் பிறந்தாயோ
கஷ்டங்கள் போக்கவே
காளியாய்ப் பிறந்தாயோ
மரகதத் தொட்டிலிலே
மரகதமே நீ உறங்காய்                                6

Aiswaryam   alikkave,
Ashta  Lakshmiyai  piranthaayo,
THunbam thudaikkave,
Durgayai   piranthaayo
Kashtangal  pokkave
Kaaliyai  piranthaayo
Marakatha  thottilile  ,
Marakathame  nee  urangaai

For giving  prosperity,
Were   you born as   Ashta Lakshmi.
For wiping  off sorrow  ,
Were  you born as   Durga
For removing   sufferings,
Were  you born as Kali
In the cradle   studded  with emeralds,
Oh  emerald  , you please sleep

என் சிந்தை குளிரவே
ஸ்ரீ சக்ரத்தில் அமர்ந்தாயோ
காமேஸ்வரரை மணக்கவே
காமேச்வ்ரியாய்ப் பிறந்தாயோ
அசுரர்களை அழிக்கவே
லலிதையாய்ப் பிறந்தாயோ
கோமேதகத் தொட்டிலிலே
கோமதியே நீ உறங்காய்                            7

Yen chinthai kulirave,
Sri chakrathil   amarnthaayo
Asurarkalai azhikkave,
Lalithayaai  piranthaayo
Gomedhaka  thottilile,
Gomadhiye  nee urngai

For  making my  thoughts cool,
Did  you sit  on the Sri Chakra
For destroying the asuras,
Were  you born as lalitha,
In the cradle  studded  with  cinnamon stone  ,
Oh  Gomathi  you please  sleep  

எங்கள் குலக்கொழுந்தாய்
எங்களிடம் பிறந்தாயோ
பால் வடியும் உன் முகத்தைப்
பார்த்தே பசி தீர்ந்திடுவேன்
உன் கருணை விழிகளினால்
கவலைகள் மறந்திடுவேன்
நீலம் பதித்த தொட்டிலிலே
நீலாயதாட்சி நீ உறங்காய்                          8

Yengal  kula kozhunthai,
Yengalidam  piranthaayo
Paal vadiyum  un mugathai ,
Paarthe  pasi  theerthiduven
Un karunai  vizhikalinaal
Kavalaikal  maranthiduven
Neelam  pathitha  thottilile
Neelayathakshi  nee  urangai

As the  flame  of our clan,
Were  you born with us,
Seeing your face   ebbing with innocence
WE would   satiate  our hunger,
By   your   eyes   of kindness  ,
We  will forget all our worries,
In the   cradle   studded  with topaz,
Oh Neelayathakshi  , please   sleep

ஒளிதரும் உன் கண்களிலே
மை தீட்டி மகிழ்ந்திடுவேன்
சாந்தமான முகத்தினிலே
சாந்துப் போட்டும் இட்டிடுவேன்
என் கண்ணே பட்டிடாமல்
திருஷ்டியும் கழித்திடுவேன்
கனகரத்னத் தொட்டிலிலே
கனக துர்க்கையே நீ உறங்காய்  

Oli tharum  un kankalile ,
Mai  theetti  magizhthiduven,
Saanthamaana  mugathinile,
Santhu pottum  yittiduven
Yen kanne  pattidaamal
Drishtiyum  kazhithiduven,
Kanaka rathina   thottilile,
Kanaka   durgaye   nee urangai

In your eyes   that gives out lifght,
I will  put kajal   and become very happy,
IN your very peaceful face,
I will  put a thilak   with   chaanthu,
Avoiding  my own eyes  putting evil eye,
I  would   do  rituals   to remove it,
In the cradle   studded   with golden gem,
Oh Kanaka  Durga , please   sleep

No comments: