Ayyappa suprabatham in to Tamil
By Kaviyur M.V.Narayana Iyer
Translated in to Tamil by
Smt.Gita Kalyan
(You can see my translation in to english https://stotrarathna.blogspot.com/2009/07/iyappa-suprabatham-malayalam.html)
ஶ்ரீ அய்யப்ப ஸுப்ரபாதம் … 1991 ஆம் ஆண்டு மலையாளத்தில் இயற்றியவர் — ஶ்ரீ கவியூர் எம். வீ. நாராயண ஐயர்… தமிழாக்கம் - அடியேன் கீதா கல்யாண். சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள் மண்டல காலத்தில் பாடி மகிழ இதோ ஒரு அருமையான பாடல் தொகுப்பு.
உத்திஷ்டோத்திஷ்ட பூதேசா
உத்திஷ்ட மஹிஷீ ஹரா
உத்திஷ்ட தர்ம ரக்ஷஸ்வா
கலேர் தோஷம் அபாகுரு. (2)
ஸஹ்யாத்ரி துங்க ஶ்ருங்கேஷு
பாலார்க்காருண ரச்ம்யயா
பச்ய: குங்கும வர்ணானி
குர்வந்தி திவஸாகமே. (3)
உத்ஃபுல்ல நவ ஸும ஸௌரப்யம்
ஸம்வஹன் கந்தவாஹனம்
ப்ரஸாரயதி ஸர்வத்ர
த்வத் யசாம்ஸி வஸத் ஜன: (4)
ஜித நித்ரோஸி பகவன்
ஜிதேந்த்ரிய மஹாமுனே
உத்திஷ்ட த்யான நித்ராய
ஶ்ரூயதே தவ கதாம்ருதம். (5)
ஹேமந்தஸாந்த்ர ஹிமசுப்ர துகூலரம்யம்
ஸந்த்யாம் உபாஸ்ய நதபுஷ்கரணீஷு பூர்வாம்
ஆஸ்தாயமண்டல தபஸ்வி ஜன:படந்தீ
ஶ்ரீபூதநாத பகவன் தவ ஸுப்ரபாதம். (6)
ஸம்ஸாரதுக்கத்தில் தவிக்கும் ஜனங்கள்க்கு
ஆனந்தமும் துரிதசாந்தியும் நல்க வேண்டி
காமாரியாம் விஷ்ணுவில் சிவனுக்கு உதித்த
ஶ்ரீபூதநாத பகவன் தவ ஸுப்ரபாதம். (7)
அந்த திவ்யஜாத சிசுவின் பரிபாலனத்தில்
விருப்பமேதுமில்லாத தந்தையர், காட்டில்
விட்டுச் சென்ற மதிமோஹன சித் ஸ்வரூபா
ஶ்ரீபூதநாத பகவன் தவ ஸுப்ரபாதம். (
வேட்டைக்கு வன்வனம் வந்த பந்தளேசன்
தெய்வேச்சையால் அங்கு வந்து மலர்ந்த கண்களால்
அள்ளிப் பருகின மணிகாஞ்சன காந்திராசே
ஶ்ரீபூதநாத பகவன் தவ ஸுப்ரபாதம். (9)
அன்புடன் குழந்தையையெடுத்து தேரிலேற்றி
அரண்மனை வந்து பத்தினி கராம்புஜத்தில்
அர்ப்பித்த நேரம் புன்சிரிப்புதிர்த்து நின்ற
ஶ்ரீபூதநாத பகவன் தவ ஸுப்ரபாதம். (10)
ஸந்தானலப்தியிது தெய்வநியோகமென்று
ஸ்ஸந்தோஷமாயினர் அரசனும் ராணியும்
அருமைக் குழந்தைக்கு பெயர்சூட்டி மணிகண்டநாமம்
ஶ்ரீபூதநாத பகவன் தவ ஸுப்ரபாதம். (11)
அனைவரும் ரசிக்கும் அழகும் மணிகண்டனென்ற
பெயரும் மனோஜ்ஞமணிபூஷண காந்தியும்
பாரோர்க்கு அளவிலா ஆனந்தமருளும்
ஶ்ரீபூதநாத பகவன் தவ ஸுப்ரபாதம். (12)
இரண்டானதே மணிகண்டன் வயது ராணி பெற்றாள்
இன்பனாம் நல்லொரு தம்பி புதுமலர் போல்
தம்பியுடன் கூட பல லீலைகள் காட்டி நின்ற
ஶ்ரீபூதநாத பகவன் தவ ஸுப்ரபாதம். (13)
அரசனுக்கு அதிக அன்பு மணிகண்டனிடமே
அரசிக்கோ தனது மகனில் பெரும் மமதை
வேற்றுமையேதுமிலாமல் வளர்ந்து வந்த
ஶ்ரீபூதநாத பகவன் தவ ஸுப்ரபாதம். (14)
தினம்தினம் இப்படி விளையாடி வளர்ந்து
அரைமனைக்கும் அமரர் ஜனங்களுக்கும்
தெய்வீகமான அனுபூதி அளித்த நாதா
ஶ்ரீபூதநாத பகவன் தவ ஸுப்ரபாதம். (15)
தேசத்தின் உன்னத பண்டிதர்களையழைத்து
குழந்தைகட்கு குலவித்யை நல்கினான் பந்தளேசன்
ஆயுதபயிற்ச்சியில் மிகுந்த தேற்ச்சி பெற்ற
ஶ்ரீபூதநாத பகவன் தவ ஸுப்ரபாதம். (16)
உத்தமோத்தமனாம் மகனை யுவராஜனாக
வாழ்விக்கவே அரசன் நினைத்த நேரம்
அரசியோ ஹந்த! கோபமுடன் தடுத்துவிட்ட
ஶ்ரீபூதநாத பகவன் தவ ஸுப்ரபாதம். (17)
காட்டில் கிடந்தவனுக்கு ராஜ்யம் அஹோ விசித்ரம்
சொந்தக் குமாரனை ஒதுக்குவது என்ன ந்யாயம்?
என்று சொல்லிச் சிலர்கோள்மூட்டினார்கள்
ஶ்ரீபூதநாத பகவன் தவ ஸுப்லபாதம். (18)
துர்மந்த்ரியொருவன் ராணியுடன் கூட்டுசேர்ந்து
அரசன் விருப்பத்தை உடைத்தெறியவேண்டி
யோசனை செய்தான் சில செயல்கள் இரவில்
ஶ்ரீபூதநாத பகவன் தவ ஸுப்ரபாதம். (19)
மறுநாள் ராணி படுக்கையில் புரண்டழுதாள்
ஐயோ இதென்ன தலைவலி மிகத்தீவிரம்
இனித்தாங்க முடியாதென சொல்லி ஓலமிட
ஶ்ரீபூதநாத பகவன் தவ ஸுப்ரபாதம்.(20)
வந்தானே வைத்தியன் போலியானவன்
சொன்னான் சோதனைகள் செய்த பின்னர்
ரோகம் நீங்க புலிப்பால் தான் வேண்டும்
ஶ்ரீபூதநாத பகவன் தவ ஸுப்ரபாதம். (21)
உறைந்தனர் இதுகேட்ட அரசனும் அவனது மந்த்ரிகளும்
ஸேவகம் செய்யும் ப்ருத்ய ஜனங்களும் தான்
சிந்தித்துத் தெளிந்து நல்ல வாக்கு சொன்ன
ஶ்ரீபூதநாத பகவன் தவ ஸுப்ரபாதம். (22)
சற்றும் துக்கம் வேண்டாம் நான் சென்று
காட்டிற்கு புலிப்பால் எடுத்து வருகிறேன்
வில்லும் சரங்களும் எடுத்துடனே சென்ற
ஶ்ரீபூதநாத பகவன் தவ ஸுப்ரபாதம். (23)
உடன் வந்த படையாளிகள் காட்டில் எத்தும்
முன்னரே ஓர் பெண்புலியின் முதுகிலேறி
அமர்க்களமாக அருகில வந்து நின்ற
ஶ்ரீபூதநாத பகவன் தவ ஸுப்ரபாதம். (24)
ஐயோவென ஜனமெல்லாம் விரண்டோடிட
புலுயை உடனே விட்டுவிடு என்றுரைக்கச்
செய்து ராணியின் கபடத்தை காட்டிய பாலன்
ஶ்ரீபூதநாத பகவன் தவ ஸுப்ரபாதம். (25)
உண்மையறிந்த அரசன் மணிகண்டனையே
மார்போடணைத்தது கண்டாள் ராணி
அவள் தவறை உணர்த்தின திவ்யபாலகனாம்
ஶ்ரீபூதநாத பகவன் தவ ஸுப்ரபாதம். (26)
பாலகனுக்கு சீக்கிரம் அபிஷேக விழா நடத்த
மன்னிப்புடன் விண்ணப்பித்தாள் ராணியும்
இருகரம் கூப்பி நின்று பணிவாக வணங்கிய
ஶ்ரீபூதநாத பகவன் தவ ஸுப்ரபாதம். (27)
என் மாதா மோஹினியாம் விஷ்ணுவென்றறிக
தந்தை மஹேச்வரன் அதீந்த்ரியன் அஷ்டமூர்த்தி
என்றுரைத்து தன் நிஜரூபத்தை விளக்கின
ஶ்ரீபூதநாத பகவன் தவ ஸுப்ரபாதம். (28)
பம்பாநதிக்கரையின்வனாந்தரத்தில்
துங்காத்ரியாம் சபரிமலை சிகரத்தில்
வாசம் செய்ய விருப்பமென எடுத்துரைத்த
ஶ்ரீபூதநாத பகவன் தவ ஸுப்ரபாதம்.(29)
கோயில் நிர்மித்து மணிகண்டனையழைத்து
ஆகோஷமாக ப்ரதிஷ்டை செய்தான் ராஜன்
நண்பனாம் வாவரையும் உடன் சேர்த்த
ஶ்ரீபூதநாத பகவன் தவ ஸுப்ரபாதம்.(30)
பூஜை செய்வோரை நியமித்து ராஜன்
பூஜா வஸ்த்துக்களும் தனவும் நல்கி
‘தவறாமல் வந்து தரிசிப்பேன்’ எனச்சொன்ன
ஶ்ரீபூதநாத பகவன் தவ ஸுப்ரபாதம். (31)
ப்ரஹ்மாதி தேவர்கள் முனிவர்களும் வந்து
மஹிஷியென்ற பிசாசியின்கொடுமைசொல்ல
அவள் ஸம்ஹாரதாண்டவம் கடினம்கடோரம்
ஶ்ரீபூதநாத பகவன் தவ ஸுப்ரபாதம். (32)
வில்லும் அம்புகளுமெடுத்துடன் கிளம்பி
துஷ்டமூர்த்தியை எதிர்த்து வதித்த நேரம்
சட்டென ஸுந்தரியாக சொன்னாளவள்
ஶ்ரீபூதநாத பகவன் தவஸுப்ரபாதம். (33)
நானொரு தேவநாரி என் கதை கேட்பீரே
சாபத்தினாலொரு பிசாசியானேன் நான்
மோக்ஷம் கிடைத்ததே உனது திருவடியாலே
ஶ்ரீபூதநாத பகவன் தவ ஸுப்ரபாதம். (34)
ஸ்வர்க்கத்துக்கினி நான் போக இயலாது
ப்ரார்த்திக்கின்றேன் உன் மனையாளாக்கு
இதைக் கேட்ட தயவானாம் தர்மசாஸ்தா
ஶ்ரீபூதநாத பகவன் தவ ஸுப்ரபாதம். (35)
நிஸ்ஸங்கனன் எனக்கு விவாஹமில்லை
ஸத்ஸங்கமாக மாளிகைப்புறத்தம்மையாக
என் மலைக்கருகில் குடியிருந்துகொள்க
ஶ்ரீபூதநாத பகவன் தவ ஸுப்ரபாதம். (36)
காட்டாள வேஷமுடன் எருமேலி தன்னில்
பக்தர்க்கு பாதபலம் கொடுக்க வேண்டியே
தாளத்தில் அங்கவருடன் பேட்டைதுள்ளும்
ஶ்ரீபூதநாத பகவன் தவ ஸுப்ரபாதம். (37)
பாபங்களனைத்தும் ஒரு முடியில் வைத்து
பூஜைப் பொருள்களை மற்றொரு முடியில் கட்டி
இருமுடி சுமந்து மலையேறி வருவார்கள்
ஶ்ரீபூதநாத பகவன் தவ ஸுப்ரபாதம். (38)
உச்சத்திலொரு சரணம்விளியே துஷ்ட-
ஜந்துக்களை விலக்கி வனம் கடந்து
ஸூர்யோதயத்தில் அழுதா நதி வந்திடுவோம்
ஶ்ரீபூதநாதபகவன் தவ ஸுப்ரபாதம். (39)
ஸ்நானம் செய்த பிறகொரு கல் எடுத்து
குன்றேறி அங்கிட்டு ஓர் ப்ரதீகமாக
மோக்ஷவழியைக் காட்டும் பக்தர் கூட்டம்
ஶ்ரீபூதநாத பகவன் தவ ஸுப்ரபாதம். (40)
காட்டானையைக் கரடியைப் பயப்படாதோர்
மிகவும் பயப்படுவதோ கரிமலை கயற்றமாமே
பயம் பீதி நிறைந்ததாம் கரிமலையிறக்கம்
ஶ்ரீபூதநாத பகவன் தவ ஸுப்ரபாதம். (41)
பம்பாநதிக்குளிர்ஜலம் நினைவில் வைத்து
துன்பம் மறந்து வன் மலையைக்கடந்து
பம்பைக்கரையிலெத்தி விஸ்ராந்தியான
ஶ்ரீபூதநாத பகவன் தவ ஸுப்ரபாதம்.(42)
பம்பா ஸரஸ்தடமஹோ ஸுகவாஸகேந்த்ரம்
பம்பாஸரஸ்ஸு புவனத்ரய புண்யதீர்த்தம்
பம்பாவிளக்கு நயனோத்ஸவ திவ்யநேத்ரம்
ஶ்ரீபூதநாத பகவன் தவ ஸுப்ரபாதம். (43)
ஸ்நானத்தின்பின் பித்ருதர்ப்பணம் செய்து
கெட்டும் சுமந்து சரணம் விளியோடு கூட
சபரிமலையும் உடன் நீலிமலையும் ஏறியே
ஶ்ரீபூதநாத பகவன் தவ ஸுப்ரபாதம். (44)
ஶ்ரீராமதாஸர் கணநாயகரை வணங்கி
நேராக மலை கடந்து வரும் ஜனங்கள்
ஐய்யப்ப பக்தர் அறியாரே பசிதாஹவும்
ஶ்ரீபூதநாத பகவன் தவ ஸுப்ரபாதம். (45)
ஸுக்ரீவ வாலிகள் எறிந்த சிலா ஸமூஹம்
அக்குன்றுகளில் கல்லிட்டு தாண்டிவந்து
பகவானை நினைத்து மலை கடந்து
ஶ்ரீபூதநாத பகவன் தவ ஸுப்ரபாதம். (46)
மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க மலையேறிச்
சென்றால் சபரபீடம் ஸுகமாயடைந்திடுவர்
ஶ்ரீராம்பக்தை சபரிஸ்துதி மோக்ஷமார்கம்
ஶ்ரீபூதநாத பகவன்தவ ஸுப்ரபாதம். (47)
அங்கிருந்தே தொடர்ச்சியாய் கேட்கலாம்
ஐய்யப்ப ஸன்நிதியில் வெடிவழிபாடு சப்தம்
கூடவே வரும் கற்பூர ஆழியின் ஸுகந்தம்
ஶ்ரீபூதநாத பகவன் தவ ஸுப்ரபாதம். (48)
அச்வத்த வேருகளில் சரம் குத்தி பக்த்யா
சுற்றிவந்து ஜனக்கூட்டம் ஒன்றிணைந்தால்
கூட்டத்தில் ஒழுகி ஸன்னிதியில் வரலாம்
ஶ்ரீபூதநாத பகவன் தவ ஸுப்ரபாதம்.(49)
பொன்னில் இழைத்த பதினெட்டு படியின்கீழ்
கண்ணீர் ததும்ப உடலில் புளகாங்கிதமுடன்
பக்தியுடன் அப்படிகளேகற்றும் அத்ருச்ய சக்தி
ஶ்ரீபூதநாத பகவன் தவ ஸுப்ரபாதம். (50)
தங்க கொடிமரம் அருகில் ஜ்வலிக்கும்
கற்பூர ஆழியின் சோபையி்ல் கண்கள்மூடி
முட்டிமோதி பகவான் திருமுன்பில வந்தோம்
ஶ்ரீபூதநாத பகவன் தவ ஸுப்ரபாதம்.(51)
ஐயன் திவ்யயவிக்ரஹமே நயனாபிராமம்
புண்யதரிசனமோ தேவ ஸௌக்கியம்
ஐய்யப்ப நாம சரணம்விளி தேவமந்த்ரம்
ஶ்ரீப்பூதநாத பகவன் தவ ஸுப்ரபாதம் (52)
உன் ஸன்னிதானம் வருவோர்அனைவரும் ஸமம் தான்
ஸ்வாமியென்றே ஸம்போதனை அனைவர்கும்
ஸ்வாமிமயமே அனைத்துப் பொருட்களும்
ஶ்ரீபூதநாத பகவன் தவ ஸுப்ரபாதம்.(53)
ஜாதி செருக்கு மதபேதம் ஒன்றுமில்லை
ஸத்துக்களும் தனிகரும் பேதமேதுமில்லை
வேஷத்திலும் ஸகலரும் ஒற்றுமையாகவே
ஶ்ரீபூதநாத பகவன் தவ ஸுப்ரபாதம். (54)
இவ்வண்ணமுள்ள ஸம்பாவனை சிறப்பு
அத்வைத தத்வமஸி படிப்பினையாக்கி
உலகனைத்தும் நவமதம் விரிவுபடுத்தும்
ஶ்ரீபூதநாத பகவத் சரணௌ சரணம் ப்ரபத்யே (55)
ஶ்ரீபூதநாதா சரணமென் ஐய்யப்பா
கலியுக வரதா சரணமென் ஐய்யப்பா
வாவரு ஸ்வாமி சரணமென் ஐய்யப்பா
சபரி கிரீசா சரணமென் ஐய்யப்பா
மங்களம்
மங்களம் சிவபுத்ராய
மோஹினீஸுத மங்களம்
மங்களம் பந்தளேசாய
லோகநாதாய மங்களம்.
மங்களம் ஸாதுஸேவாய
பக்த தாஸாய மங்களம்
மங்களம் தேவதேவாய
ஸார்வபௌமாய மங்களம்.
ஸ்வாமியே சரணம் ஐய்யப்பா !
( தமிழாக்கம்… கீதா கல்யாண்)
No comments:
Post a Comment