Prayer to
Goddess
By
Kumar
Ramanathan
Translated
by
P.R.Ramachander
தூய்மை
கெடுமென அஞ்சிச் சேற்றினில்
தாமரை பூத்திடத் தயங்கிடுதோ ?
தாமரை பூத்திடத் தயங்கிடுதோ ?
அன்னையே!உன்பதத் தாமரை எந்தன்
சென்னியில் மலர்ந்திடத் தயங்குவதேன் ?
சென்னியில் மலர்ந்திடத் தயங்குவதேன் ?
THooymai
kedumena Anji chethinil,
THamarai poothida
thayangiduthio?
Annaye un
pada thamarai yendhan,
Chenniyil
malanthida thayanguvathen?
Fearing that purity
would be lost , does the lotus ,
Hesitate to flower in the slimy soil?
Oh mother why is
it that the lotus of your feet,
Hesitate to
open on the yop of my head.
கறையுற்ற
நிலவினில் குறைகாணாமல்
சிரந்தனில் சூடிய ஜகத் ஜனனி!
சிரந்தனில் சூடிய ஜகத் ஜனனி!
அருகதையற்றவனாயினும்
எந்தன்
சிரந்தனில் திருவடி பதித்தருள் நீ!
சிரந்தனில் திருவடி பதித்தருள் நீ!
Karayutha
nilavil kurai kaanaamal ,
Siram thanil choodiya
Jagat Janani,
Arugathayathavanaayinum
yenthan,
Siram thanil
thiruvadi pathitharul nee
Oh mother of
universe who adorned her head,
The moon with
stain without finding fault on it,
Though I do not
merit for such a grace ,
Please place your divine feet on my head.
பாமர
தாசனைப் பாவலனாக்கிய
சாமளையே! என் கோரிக்கை கேள்!
சாமளையே! என் கோரிக்கை கேள்!
தரம்,தகுதி யேதும் தேடாமலெந்தன்
சிரந்தனில் பதித்தருள்வாய் பூந்தாள்!
சிரந்தனில் பதித்தருள்வாய் பூந்தாள்!
Paamara
dasanai pavalanaakiya ,
SAmalayr , yen
korikkai kel,
THaram thaguthi
yethum thedamal yenthan,
Siram thanil
pathitharulvai poonthaal.
Oh Shyamala who
made an ignorant slave
,
In to a great poet
, please hear my request ,
Without searching for
quality or suitability,
Please place your
flower like feet on my head.
ஓடேந்தித்திரியும்
பிச்சாண்டிப்பித்தனை
நாடி மணங்கொண்ட நாரிமணி!
நாடி மணங்கொண்ட நாரிமணி!
ஞானசூனியன்
நாடிவந்தேனுனை ,
ஞானப்பிச்சை ஈந்தருள்வாய் நீ !
ஞானப்பிச்சை ஈந்தருள்வாய் நீ !
Odenthi thiriyum
pichandi pithanai ,
BNaadi manam konda
narimani,
Jnana sooniyan
naadi vanthen unai,
Jnana pichai yeentharulvai nee.
Oh gem of a lady
who loved and married,
A mad beggar carrying a
begging bowl,
Me, who does not
have wisdom has come in search of you,
Please give
me the alms of wisdom to me.
No comments:
Post a Comment