வாயு குமாரர் துதி
Vayukumarar Thuthi
Prayer to son of wind god
Translated by
P.R.Ramachander
வாராமல் இருப்பாரா அருள் தாராமல் இருப்பாரா
வாயு குமாரர் அந்த வானர வீரர்
வருக என்றே நாம் உருகி நின்றால் இங்கு. (வா).
Vaaraamal irupparo, arul thaaraamal irupparo
Vayu kumarar, antha vanara veerar
Varuka yendre nam urugu nindraal ingu (vaa)
Will he avoid coming , will he not give his blessing
That valorous monkey who is son of wind God
If we ask him to come and stnd in ecstacy (vaa)
ராமாயணம் எனும் காவிய நாயகன்
ஸ்ரீ ராமச்சந்த்ரனின் மானத்தை காத்தவர்
ஜானகி மாதாவின் கண்ணீர் துடைத்தவர்
சத்தியம் காக்கவே வாழ்ந்திடும் உத்தமர். (வா).
Ramayanam yenum kaviya nayakan
Sri Ramachandranin maanathai Kathavar
Janaki mathavin kaneer thudaithavar
Sathiyam kaakaveVaazhnthidum uthamar(vaa)
The hero of the epic Ramayanas,
He who protecteted the respect of Lord Rama
He who wiped away tears of mother Sita
The great one who lives only to protect truth
புலங்களை அடக்கிய புண்ணிய கண்ணியர்
நலங்களை வாரி வழங்கிடும் நல்லவர்
அறிவுச்சுடர் அவர் அருள் நிலவானவர்
அஞ்சனை மனம் மகிழ் ஆஞ்சநேயர் அவர். (வா).
Pulankalai aakkiya punniya kanniyar
Nalankalai vaari vazhangidum nallavar
Arivu chuddar avar,arul Nilavaanavar
Anjanai manam magizh Anjaneyar (vaa)
The honest one who controlled his sense organs
The good one who use to give good happening in heaps
He is light of wisdom, he who is moon of wisdom
He is Anjaneya who used to make Anjana happy
அரக்கத் தனத்திற்கு அக்னி போன்றவர்
அக்ஞானம் நீக்கிடும் மெய்ஞான குரு அவர்
உறக்கத்திலும் நம்முடன் விழிப்பாயிருப்பவர்
ஒருக்காலும் மறக்காது விருப்புடன் காப்பவர். (வா).
Arakka thanathukku Agni pondravar
Akjnanam neekidum meijnana Guru avar
Urakkathilum nammudanvizhippayiruppavar
Orukkalum marakkathu viruppudan kaappavar(vaa)
He s like fire to qualities of Rakshasa
He is guru teaching good wisdom to the ignorant
He would awake even in sleep when he is with us
Without forgetting ever , he would protect us with interest
No comments:
Post a Comment