Ganapathi thuthi
கணபதி துதி
Prayer to Ganapathi
இயற்றியவர் : சாந்தா ஸ்ரீநிவாசன்
By
Santha Srinivasan
Translated by
P.R.Ramachander
தொந்திகணபதியே தொல்லையைப் போக்கிடுவாய்
தும்பிக்கை ஆழ்வாரே துன்பத்தை நீக்கிடுவாய்
மூஷிகவாகனனே மும்மலம் நீக்கிடுவாய்
மகேசனின் மைந்தனே மக்களைக்காத்திடுவாய்
முக்குறுணிப்பிள்ளையாரே முன்வினைகள் களைந்திடுவாய்
கொழுக்கட்டைப் பிரியனே கொடுமைகளை விலக்கிடுவாய்
வரசித்தி விநாயகனே வரமதை அளித்திடுவாய்
நவசக்தி விநாயகனே நவநிதிகள் அளித்திடுவாய்
வல்லப கணபதியே வல்லமையைத் தந்திடுவாய்
குளக்கரை விநாயகனே குடும்பத்தைக் காத்திடுவாய் 10
Thonthi ganapathiye thollayai pokkiduvai
Thumbikkai aazhvaare
thunbathai neekkiduvai
Mooshika vahanane mummalam neekkiduvai
Mahesanin mainthne makkalai kaathiduvai
Mukkuruni pillayyare, mun vinaikal kalainthiduvai
Kozhukattai priyane kodumaikal vilakkiduvai
Vara sidhi vinayakane varam athai alithiduvai
Nava sakthi vinayakane nava nidhika; alithiduvai
Vallabha Ganapathiye vallamayai thanthiduvai
Kulakarai vinayakane kudumbathai kathiduvai 10
Oh Ganapathi with a paunch , remove my problems
OH azhvar with a tusk, remove my sorrow
Oh Lord who rides on mouse , remove three types of sins
Oh son of Mahesa please protect the children
Oh Mukkuruni pillayar, remove the past Karmas
Oh Lord who likes Modhakas, please see that violence is avoided
Oh Vara Sidhi Ganesa, please grant me boons
Oh Nava Sakthi Ganesa, grant me nine type of treasures
Oh Ganesa with wife, grant me strength
Oh kanesa of the pond bank please protect m family 10
எருக்குமாலை அணிபவனே என்றென்றும் அருளிடுவாய்
சுப்ரமணியனின் அண்ணனே சுகமதை அளித்திடுவாய்
தும்பைப்பூ பிரியனே துர்பயம் போக்கிடுவாய
அருகம்புல் அணிபவனே அன்புடனே வந்திடுவாய்
கௌரியின் மைந்தனே கேட்டவரம் தந்திடுவாய்
ஆனந்த கணபதியே ஆபத்தைப் போக்கிடுவாய்
நர்த்தன கணபதியே நன்மையே புரிந்திடுவாய்
யானை முகத்தோனே யமபயம் போக்கிடுவாய்
பளிங்குப் பிள்ளையாரே பலவிதநோய் நீக்கிடுவாய்.
சதுர்த்தியில் தோன்றியவனே சங்கடங்கள் தீர்த்திடுவாய் 20
Yerukku malai anibavane, yendrendrum aruliduvai
Subrahmanyanin annane sukhamathai alithiduvai
THumbai poo priyane dur bhayam pokkiduvai
Arukam pul anibhavne anbudane vanthiduvai
Gauriyin mainthane , ketta varam thanthiduvai
AAnanda ganapathiye aapathai pokkiduvai
Narthana ganapathiye nanmayaye purinthiduvai
Yanai mukhathone yama bhayam pokkiduvai
Palingu pillayaare pala vidha noi neekiduvai
Chathurthiyil thondriyavane sangadangal theerthiduvai
Oh god who wears calatropis flower garland, keep on bleesing for ever
The elder brother of Lord Subrahmanya grant me pleasurable life
He who likes leucas flower , remove wrong fear
He who wears scotch grass, please come with love
Oh son of Gauri , grant the poon that is asked
Oh joyful Ganapathi, please remove dangers
Oh dancing Ganapathi do only good
Oh lord with elephant face, please remove fear of death
Oh marble Ganapathi, Cure different types of diseases
He who is born in Chathurthi remove my fears
சதுர்த்திவிழா காண்பவனே சந்ததியைக் காத்திடுவாய்
ஊர்த்துவ கணபதியே ஊக்கத்தை அளித்திடுவாய்
முப்பழங்கள் உண்பவனே முன்நின்று காத்திடுவாய்
பால கணபதியே பாவத்தினைப் போக்கிடுவாய்
மணக்குள விநாயகனே மகிழ்ச்சியை நல்கிடுவாய்
மாங்கனியைப் பெற்றவனே மாண்புடனே வாழச்செய்வாய்
கற்பக விநாயகனே கஷ்டங்கள் போக்கிடுவாய்
ஏகதந்த கணபதியே அறியாமையை அகற்றிடுவாய்
ந்ருத்ய கணபதியே கலைகளைக் கற்பிப்பாய்
மஹாகணபதியே மங்களங்கள் அருளிடுவாய். 30
Chathurthi vizhaa kanbavane santhathiyai kaathiduvai
Urhwa Ganapathiye ookkathai alithiduvai
Muppazhangal unbavane mun nindru kaathiduvai
Bala Ganapathiye pavathinai pokkiduvai
Manakula vinayakane magizhchiyai nalkiduvai
Mankaniyai pethravane maanbudane vaazha cheivai
Karpaka vinayakane kashtangal pokkiduvai
Yeka Dantha Ganapathiye, ariyaamayai agathiduvai
Nruthya ganapathiye kalaikalai karppipai
Maha ganapathiye mangalangal aruliduvai 30
He who sees Chathurthi festiva; , please protect our children
Oh Ganapathi who is tall grant us enthusiasm
Oh God who eats banana, jack and mango, please stand in front and protect us
Oh Boy Ganapathi, please remove our sins
Oh Manakkula Ganapathi of Pondy grant us happiness
Oh Lord who got mango fruit, make us live with respectability
Oh Karpaka Ganesa remove our sufferings
Oh Ganapathi who has one tusk , remove our ignorance
Oh dancing Ganapathi please r teach us fine arts
Oh great ganapathi bless us with auspiciousness
No comments:
Post a Comment